ஜிகர்தாண்டா 2 படம் படத்தில் ஹீரோ வில்லன் இவங்க ரெண்டு பேரும். அப்போ தரமா இருக்குமே. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.
ஜிகர்தண்டா படம் பார்த்தவர்கள் climax பற்றி விளக்க முடியுமா? பாபி சிம்ஹா ஹீரோ ஆயிடுறாரு..சித்தார்த் பாபி சிம்ஹா மாதிரி அசால்ட் சேது ஆயிடுறாரா கடைசியில..விஜய் சேதுபதிய மிரட்டி நடிக்க வைக்கிறாரே என்றுகேள்வி இருந்தது. அப்போவே கார்த்திக்கு இரண்டாம் பாகம் எடுக்கவேண்டும் என்ற ஐடியா இருந்திருக்கும் போல, கொஞ்ச நாளுக்கு முன்னாடி அனந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வந்தது. இப்போ அந்த படத்தின் இன்னொரு அப்டேட் கிடைத்திருக்கிறது.
எல்லா directorsக்கும் அவங்க பிலிமோகிராபில ஒரு படம் கல்ட், G.O.A.T பெஸ்ட்-னு ஒரே ஒரு படம் இருக்கும். அப்படி, கார்த்திக் சுப்புராஜ்க்கு இந்த ஜிகர்தண்டா. மேக்கிங், எழுத்து, நடிப்பு, இசை என்று எல்லாமே தரமாக இருக்கும் 🔥💥✨ஜிகர்தண்டா படத்தில் ஒரு தயாரிப்பாளர் சொல்வார் ‘ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் வேண்டும்’ என்று. அதில் வரும் வசனம் எல்லாம் தீயா இருக்கும். ஒரு கம்ப்ளீட் படம்.
தற்போது இவர் இயக்கும் ஜிகர்தண்டா 2 படத்தில் நடிகர்களாக இணையப்போகும் அந்த இரண்டு பேர் SJ சூரியாவும், ராகவா லாரன்சும். ரொம்ப புதிய காம்போ. திரையில் இவங்க மீட்டப் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது. SJ சூர்யாக்கு மீண்டும் லைப் restart ஆனதுக்கு காரணம் சொல்லலாம்.ஒரு விதத்தில் கார்த்திக்கு சூர்யா கடமை பட்டிருக்கிறார். அதனால் அவர் என்ன சொன்னாலும் பண்ணுவார்.
இதுவரை வந்த பாகம் 2 படம் எல்லாம் அந்தளவுக்கு ரசிகர்களை திருப்தி செய்ததில்லை. இந்த படம் ஸ்கிரிப்ட் மட்டும் ஜிகர்தண்டா முதல் பாதி போல ரொம்ப மாசா இருந்தால் பொதும். இதில் surprise விஷயம் என்னவென்றால் சித்தார்த்தும், அசால்ட் சேதுவாகிய பாபி சிம்ஹாக்கும் என்ன ரோல் என்பது தான். கண்டிப்பா அவங்கள காட்டியே ஆகணும் நேரடி sequel என்றால். பார்ப்போம் நமக்கு என்ன surprise வெச்சிருக்காங்கன்னு.