அறம் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த படைப்பு.. கறுப்பர் கூட்டம்.. மிரட்டல்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Karuppar nagaram trailer

ஆறாம் இயக்குனர் கோபி நயினாரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க வாய்ப்பில்லை. எடுத்த முதல் படமே அவ்வளவு தரமான படமாக அமைந்தது. அந்த படம் மட்டும் விஜய் பண்ணியிருந்தால் climax காட்சியில் சில அரசியல் கட்சிகள் அழுது புலம்பியிருப்பாங்க. இந்த கோபி நயினார் கத்தி படம் ரிலீசுக்கு முன்பு செம்ம வைரல் ஆனார்.

காரணம் கத்தி கதை அவருடையது என்று, அஜித்தை வைத்து எடுக்கப்போவதாக சொல்லியிருந்தார். அப்போது எல்லாரும் attention காக அவர் இப்படி எல்லாம் பன்றாரு என்று பேசினாங்க. ஆனால் ஆறாம் படம் ரிலீஸ் ஆன பின் தான் தெரியுது மனுஷன் சொல்வது உண்மை தான் போல என்று. எப்படியோ அது பழைய கதை, இப்போது மீண்டும் ஒரு தரமான கன்டென்ட் ஓட வந்திருக்கார்.

Karuppar nagaram trailer

அரசியலிலே ரொம்ப பெரிய அரசியல் வறுமை அரசியல் தான். தொழிலாளர்கள் உழைப்பில் ஒருவன் வாழ்வதா அல்லது நம் 100 பேர் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து 100 பேர் பங்கிட்டு வாழ்வதா என்ற அரசியல் தான் இந்த படம் பேசுகிறது. கண்டிப்பா டீசர் இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும் போது படம் கண்டிப்பா எந்த லெவெலில் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

இப்போ தான் ஜெய் சரியான ட்ராக்ல போயிட்டு இருக்காரு, நிறைய நல்ல படங்களை மிஸ் பண்ணிட்டு இப்போ பாருங்க இவ்வளவு நாள் ஆகியிருக்கு comeback கொடுக்க. இனி இதை சரியாக பிடித்திக்கொள்ள வேண்டும். லேபிள் என்று அரசியல் சீரிஸ் வேற ரிலீஸ் ஆகியிருக்கு, அதுவும் தரமா இருக்கும் என்று நம்புகிறோம். சரி இப்போ இந்த டீசரை பார்க்கலாம்.

Video:

Related Posts

View all