சும்மா நெருப்பாக இருக்கு பா, கருப்பு! மெரட்டும் சூர்யாவின் புதிய பட டீசர்!

கடந்த சில காலமாக சூர்யாவின் படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. சூர்யா ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்த இந்த நிலையில், தற்போது வெளியான டீசர் பெரிய ஆறுதலாக இருக்கிறது.
இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது.
நடிகர் சூர்யாவுக்கு இது மிகப்பெரிய கம்பேக் ஆகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த திரைப்படத்தில் திரிஷா, இன்றன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம் (நட்டி), ஆனக மாயா ரவி மற்றும் சுப்ரீத் ரெட்டி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவு ஜி. கே. விஷ்ணு, திரைத்தொகு ஆர். கலைவாணன், தயாரிப்பு வடிவமைப்பை அருண் கவனித்துள்ளார்.
