காசேதான் கடவுளடா.. அஜித் செம்மயா டான்ஸ் ஆடுறார்ல.. அந்த மூவ்மென்ட்ஸ் இருக்கே. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
துணிவு படத்தின் பாடல்கள் எல்லாம் பார்த்தால் படத்தில் எச்.வினோத் சம்பவம் பண்ணிருப்பார் என்று தோன்றுகிறது. முதல் சிங்கிள் ரிலீஸ் ஆன பொது தெரிந்தது இது ரசிகர்களுக்கான பாடல் என்று, இரண்டாவது சிங்கிள் தான் கதையுடன் ஒன்றி வரும் பாடல் போல இருக்கிறது. இந்த இரண்டாவது சிங்கிளில் அஜித்தோட டீமை ரசிகர்களுக்கு இன்ட்ரோ கொடுத்திருக்காரு இயக்குனர். அவங்க ஆடும்போதே தெரியுது, ஒரு டீமா கொள்ளை அடிக்க போவாங்கன்னு.
காசு தான் முக்கியம் என்பது அரசியல் தேர்தல்கள் வரும்போது நிரூபணம் ஆகும். எப்படியென்றால், பொள்ளாச்சி பொருத்த வரைக்கும் பாமர மக்கள் அதிகம், இங்க காசு கொடுத்தா போதும் யாருக்கு வேண்ணாலும் ஓட்டு போடுவாங்க. ஜெயராமன் பெயர் பொள்ளாச்சி பாலியல் வழக்குல அடி பட்டது, இருந்தாலும் இந்த மக்களுக்கு காசு தான் முக்கியம் அதனால் தான் அதனை பெண்களை நாசம் செய்த வழக்கில் சிக்கியிருக்கும் மகனின் தந்தைக்கே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டதை மறுக்க முடியாது.
இந்த துணிவு படத்தில் அஜித் ஏன் காசு தான் முக்கியம் என்று பணத்தின் பின்னால் செல்கிறார். அதுவும் ஏன் வங்கியில் கொள்ளை அடிக்கிறார் என்ற justification இயக்குனர் சரியாக கொடுத்துவிட்டால் போதும், படம் பிச்சுக்கிட்டு ஓடும். ஏனென்றால் ஈஸியா மக்கள் காசு, பணம் என்ற கான்செப்டுடன் ஒன்றி போய்டுவாங்க. எச்.வினோத் படம் என்றாலே பல உண்மை சம்பவங்களை கோர்த்து தான் படமாக எடுப்பார். இந்த படமும் கண்டிப்பாக அந்த வரிசையில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நேற்று ரிலீசான பாடல், இணையத்தில் செம்ம ட்ரெண்டிங். எப்போவும் அஜித் விஜய் பாடல்கள் வந்தாலே இதான் நிலைமை அது இந்த பாடலுக்கு மட்டும் விலக்கு இருக்குமா என்ன, ஜிப்ரான் அஜித் ரசிகர்களை திருப்தி செய்யும்படி இசையமைத்துள்ளார். அதனால் அவரை கொண்டாடி வருகின்றனர். என்னதான் அவர் நல்ல இசை கொடுத்திருந்தாலும் யுவன் இசையை மிஸ் செய்கிறோம்.
வீடியோ: