சமந்தா தள்ளி நிக்கணும்.. இது ஐட்டம் சாங்! இது வரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சி! வெறி ஏத்தும் பிரியா ஆனந்து சாங் வீடியோ.
சிஸ்லிங் சிவப்பில் பிரியா ஆனந்த் : வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்!
நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காசேதான் கடவுளடா. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தில் வரும் பாடல் காட்சிகளில் இருந்த சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
அதில் நடிகை பிரியா ஆனந்த் சிஸ்லிங் சிவப்பு நிற புடவையில் படு கிளாமராக உள்ளார். அவருக்கு இணையாக நடிகர் சிவாவின் கருப்பு நிற கோட் மற்றும் சிரிப்பும், சீரியசும் கலந்த முக பாவனை அல்டிமேட் கேமிஸ்ட்ரியாக வர்க் அவுட் ஆகியுள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான படம் ‘காசேதான் கடவுளடா’. இப்படத்தில் முத்துராமன், லெட்சுமி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நகைச்சுவைத் திரைப்படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தை மீண்டும் ரீமேக் செய்து வெளியாகவுள்ளது.
காமெடிக்கு பஞ்சம் இல்லாத வகையில் படம் இருக்கும் என்பதால், உலக அளவில் உள்ள சிவாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆர் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த படத்தில் வரும் பாடலில் உள்ள காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.