ஹீரோயின்னா மட்டும் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணுவார் போல.. ஆனா ரெண்டு பேரும் செம்ம pair. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
![Kashmira onboard latest video](/images/2022/12/20/hiphop-adhi-latest-video-viral-2-.jpg)
ஹிப் ஹாப் ஆதி படம் என்றாலே கொஞ்சம் ஜாலியா இருக்கும், பெருசா கருத்து எல்லாம் சொல்றேன்னு அப்போப்போ நமக்கு ஷாக் கொடுத்தாலும் ரொம்ப cringe எல்லாம் பண்ணமாட்டாரு. கண்டிப்பா காலேஜ் பசங்க, பெண்களுக்கு relate ஆகுற மாதிரி தான் படம் இருக்கும். அதனால் இவரின் படங்களுக்கு மினிமம் கேரண்ட்டி value இருக்கும். ரொம்ப ஜாலியா குடும்பத்தோட பார்த்து என்ஜாய் பண்ணும்படி.
இவர் இதுவரை ஏழு படங்கள் பண்ணிவிட்டார் என்றால் நம்பமுடிகிறதா. career ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் இருந்தார் என்பதை போல இருக்கிறது ஆனால் பாருங்க இப்போ நடிச்சுட்டு இருப்பது ஏழாவது படம். இந்த படத்தின் கதாபாத்திரங்களை தான் இப்போ அறிவிச்சுட்டு இருக்காங்க. பழைய நடிகர்கள் தியாகராஜன் நடிக்கிறார், இளைய திலகம் பிரபு நடிக்கிறார், இன்று இப்போ கதாநாயகி அறிமுகம் செஞ்சு வெச்சிருக்காங்க.
![Kashmira onboard latest video](/images/2022/12/20/hiphop-adhi-latest-video-viral-1-.jpg)
இவங்க வேற யாருமில்ல, இப்போ தமிழ் சினிமாவின் டயர் 2 happening நடிகை என்று இவங்களை சொல்லலாம். வேற யாரும் இல்ல, நம்ம காஷ்மீரா தான். சமீபத்தில் தான் இவங்க நடிச்சு வெளிவந்த வரலாறு முக்கியம் படம் பாரதூம். படம் அப்படி இப்படி இருந்தாலும் இவங்க நடிப்பு தரம்.
காலேஜ் ரோல் கதாபாத்திரம் எல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு தான் கச்சிதமா பொருந்தும். சரியா இவங்களை செலக்ட் செஞ்சது இந்த படகுக்கு ஒரு மிகப்பெரிய பலம். பாட்டு பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை எப்படியும் பிரிச்சு மேஞ்சிருவாங்க. மேலும் இந்த படத்தை இயக்குவது கார்த்திக் வேணுகோபால். இவர் ப்ளாக் ஷீப் சேனல்ல நிறைய வீடியோல பார்த்திருப்போம். இவர் முன்னாடி எடுத்த நெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா படம் கூட கமர்சியல் ஹிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Video:
Talented actress @kashmira_9 onboard for @VelsFilmIntl's #HHT7 starring & Music by @hiphoptamizha
— sridevi sreedhar (@sridevisreedhar) December 20, 2022
Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/zSQhSRKYtm