லவ் டுடே படத்துக்கு அப்புறம் இவனாவின் அடுத்த சம்பவம். அந்த எதார்த்தம் அப்படியொரு அழகு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
லவ் டுடே படத்தை தொடர்ந்து இவானா மீது ரசிகர்கள் வெறியாக உள்ளனர். எப்படி சீசன் சீசன் ஒரு ஹீரோயின் மீது கிரஷ் இருக்குமோ, அதுபோல. இவங்க ஏற்கனவே குழந்தை நட்சத்திரமா இருக்கும் போதே பாலாவின் நாச்சியார் படத்தில் GVP உடன் நடிச்சாங்க, பின்னர் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன். நடிச்ச படங்கள் எல்லாம் நல்ல படங்கள், தரமான கதாபாத்திரம் தான். என்ன பெரியளவில் நோட்டீஸ் ஆகல.
தற்போது காம்ப்லெக்ஸ் அப்டின்னு ஒரு மல்டி ஸ்டார்ரர் படம் பண்ணிட்டு இருக்காங்க. இந்த படத்தில் பெயர் தெரிந்தவர்கள் என்றால் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும், இவங்களும் தான். ரொம்ப சின்ன படம் ஆனால் தரமான கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த படத்தில் இருந்து தான் வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கு.
இந்த பாடலை பாடியவங்கஇரண்டு பேர். தமிழ் சினிமாவில் அழகான ஜோடிகள் என்று சொலலாம். இவங்க வாய்ஸில் பாட்டு வந்தாலே ஹிட்டு தான். கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் அப்படியொரு வாய்ஸ். வேற யாரு நம்ம ஜிவியும், சைந்தவியும் தான். மெலடி கிங் அண்ட் குயீன் என்று சொல்லலாம் இவங்களை. இவங்களோட வாய்ஸ் இந்த பாட்டுக்கு ரொம்ப ப்ளஸ். இவங்க குரலுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த சின்ன படத்துக்கு இதுவொரு பூஸ்ட் தான்.
இந்த படத்திற்கு இன்னுமொரு மகுடம் இளையராஜாவின் இளைய இளவல் அவரின் இசை வேறொரு பரிமாணம் தந்துள்ளது. வாழ்த்துக்கள் பட குழுவிற்கு. இளைய இளவல் என்று குறிப்பிட்டது இளையராஜாவின் இன்னொரு வாரிசான கார்த்திக் ராஜாவை தான். கார்த்திக் ராஜா யுவன் மாதிரி பிரபலம் அடையவில்லை என்றாலும் இவருடைய இசைக்கு எப்பவும் நாங்கள் ரசிகர்கள் தான். நிறைய நல்ல படங்கள் பண்ணிருக்காரு ஆனால் எல்லாமே சின்ன படங்கள், தரமான இசை எல்லாம் பெரிதாக வெளியில் தெரியவில்லை. மிஷ்கின் தான் இவரை சரியாக யூஸ் செய்வார் என்று நினைக்கிறோம் பிசாசு 2 படம் மூலம்.