50 வயசிலும் காண்டம் வாங்க 'ஆசை'.. கார்த்திக் சுப்பாராஜ் படம். கதையின் போக்கு ஒரு மாதிரி இருக்கே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கார்த்திக் சுப்பாராஜ் படம் என்றாலே மற்ற இயக்குனர்களின் படங்களை விட சற்று வித்தியமானதாக இருக்கு. ஆனால் இந்த படம் அவரது தரிப்பு, அதுவும் அந்த படத்தின் ட்ரீட்மெண்ட் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது. இயக்குனர்களின் டச் என்று ஒவ்வொரு படத்தில் ஒவ்வொன்றை சொல்லலாம். இந்த படத்தை பொறுத்தவரை எப்போது ஹீரோ, ஹீரோயின் மீட் பண்ணுவாங்க அடுத்து அவங்களுக்கு என்ன நடந்துச்சு என்பதில் அவிழ்கிறது சுவாரசியம்.
இந்த படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், சில முக்கியமான நடிகைகள் நடிச்சிருந்தாலும் ஹீரோ, ஹீரோயின் வேற ரெண்டு பேரு தான். அதை ஓத்துக்கிட்டு கதை தான் ஹீரோ என்று நம்பி நடித்த மடோன்னா, ரம்யா நம்பீசன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இந்த படத்தில் சஞ்சனா நடராஜன் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண போறாங்க என்பது மட்டும் நல்லா தெரியுது. அவங்களுக்கு செம்ம திறமை, ஆனால் படத்தில் முழுநீளமா perform பண்ண வாய்ப்பே கிடைக்கல. இதை சரியாக யூஸ் பண்ணிருப்பாங்கன்னு எதிர்பார்க்கிறோம்.
கதை ரொம்ப எளிமையானது அதில் சில பாண்டஸி விஷயத்தை mix செய்து செம்ம விருந்து கொடுத்திருக்காங்க படம் முழுவதும். காமெடிக்கு பஞ்சம் இருக்காது, காரணம் படத்தின் பெயரிலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். கையும், களவும். புதுசா திருடுவதை பழகி கொண்டிருக்கும் கதாநாயகி, கதாநாயகனுக்கு ஒரு பிரச்னை இருவரும் எப்படி மீட் செய்து கொள்கின்றனர் என்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. இந்த வீடியோலேயே கடைசியில் அந்த காட்சி வெச்சிருக்காங்க, ஆனால் டச் ஆகுமா என்று தெரியவில்லை.
ரோஹித் ஹீரோ சஞ்சனா ஹீரோயின் இவர்களை போக செந்தில், கரு.பழனியப்பன், விவேக் பிரசன்னா, விஜய் ஆதிராஜ் எல்லாரும் நடிச்சிருக்காங்க. எல்லாருக்குமே முக்கியமான மனதில் பதியும்படு ரோல் தான் இருக்கும் என்று நினைக்கிறோம். யாரும் வந்தமோ போனோமா என்று இருக்கமாட்டாங்க.
Video: