மாலையும்.. கழுத்தும்மா.. கீர்த்திக்கு மூஞ்சில அவ்வளவு சந்தோசம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Keerthy latest clicks viral

நேற்று தான் கீர்த்தி சுரேஷ், நானி நடிச்ச தசரா படம் ரிலீஸ் ஆச்சு. இந்த படத்தின் வெற்றி எப்போ ட்ரைலர் வந்துச்சோ அப்போவே பறைசாற்றப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். எப்போதுமே நல்ல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நானிக்கு இந்த படமும் தரமாகவே அமைந்துள்ளது.

இவர் நடித்த பல படங்கள் ஒரு மாதிரி பீல் குட் படங்களாக மட்டும் தான் இருக்கும். இப்போ தான் சமீப காலமாய் அவர் action படங்களில் நடித்து வருகிறார். அதுவும் இந்த படத்தில் தான் ஒரு மிரட்டல் brutal சண்டை காட்சிகள் எல்லாம் போட்டுள்ளார். இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சினிமா வாழ்க்கையில் இதுவொரு மணிமகுடம் தான்.

Keerthy latest clicks viral

கீர்த்தியை பற்றி இங்கே கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். கீர்த்தி வயது உள்ள நடிகைகள் சிலர் எல்லாம் தமிழ் படங்களில் கமிட் ஆகவே ரொம்ப கஷ்ட போடுறாங்க. ஆனால் சமீபத்தில் அதுவும் டயர் 1 நடிகைகளில் கீர்த்தி மட்டும் தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அடுத்தடுத்து கமிட் ஆகிட்டு இருக்காங்க படத்தில். இவங்க காட்டில் எப்போதுமே மழை தான்.

இவங்க அடுத்து நடிப்பது ஒரு தமிழ் படம் தான். ரிவால்வர் ரீட்டா. அந்த படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாம் இருக்கும். எப்படி பண்ண போறாங்க என்று நினைத்தாலே எதிர்பார்ப்பு எகிறுகிறது. தற்போது தசரா படத்தின் வெற்றி விழாவில் தான் மாலையும் கழுத்தும்மா இருக்காங்க வேற ஒண்ணுமில்லை. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.

Related Posts

View all