இந்த உடை போட்டுக்கிட்டு முட்டி போடலாமா? பலபலனு மின்னும் கீர்த்தி சுரேஷ் வீடியோ!

தமிழ் மற்றும் பிற மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழில் ‘ரஜினிமுருகன்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கும் நடிகை மேனகாவுக்கும் பிறந்த கீர்த்தி, கேரளாவில் வளர்ந்தவர்.

முதலில் சின்னத்திரையில் நடித்து அறிமுகமான இவர், தொடர்ந்து திரைப்படங்களில் தன்னை நிலைநிறுத்தினார். 2018ஆம் ஆண்டு வெளியான ‘மஹானதி’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் வென்றார்.
தற்போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், தனது செல்ல நாயுடன் நெருக்கமாக விளையாடும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.