கீர்த்திக்கு இப்படி ஒரு வீடியோ ரெடி பண்ணிருக்காங்க. அம்மாடியோவ் கொல மாசு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Keerthy tribute video viral

மகாநதி பார்த்துட்டு வந்ததும் தோணினது. இனி இந்த படத்துக்கு அப்புறம் கீர்த்தி என்ன பண்ணாலும் எக்ஸ்ட்ரா தான். போதும் போதும்ங்குற அளவுக்கு அந்த ஒரு படத்துலயே நடிச்சி நிரூபிச்சாச்சு. மகாநதி படத்துல தன்னோட உண்ணதமான நடிப்ப கீர்த்தி நிருபிச்சிட்டாங்க. தளபதி விஜய் சர்க்கார் ஆடியோ லான்ச்ல மிரண்டு பேசினார் இவங்க நடிப்பை பார்த்து. அந்த வாய்ஸ் தான் இந்த வீடியோவோட வாய்ஸ்ஓவர். நீங்கள் எவ்வளவு உழைப்பை மகாநதி படத்தில் நடிக்க போட்டிற்களோ அதற்கு பலனாக உங்களுக்கு ‌அதை விட இருமடங்கு பலனாக கைதட்டல் மற்றும் விருதுகளாக உங்கள் கைகளில் இருக்கிறது.

அந்த படம் முடிந்ததும் செய்தி. மகாநதி திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்-க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்று. அப்போது இந்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது:

“உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்.. உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு” ஆயிரம் விமர்சனங்களை கடந்து வென்றவர் கீர்த்தி சுரேஷ். என்னதான் ஒரு க்யூட் நடிகையா எல்லார் மனதிலும் இடம்பிடித்து ஒரு அறிமுகம் கிடைத்தாலும், நாள் ஆக ஆக இவரை ஒரு சிலர் கலாய்க்க ஆரம்பித்தனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று ஜெயித்திருக்கிறார் என்றால் அவங்களோட அந்த தன்னம்பிக்கை தான்.

Keerthy tribute video viral

எல்லா நடிகர்/நடிகைகளுக்கும் ஒரு லோயல் பேன் பேஸ் இருக்கு, அவங்க எப்போது நீங்க நல்லா நடிக்கிறிங்க இல்லை அதையெல்லாம் தாண்டி உங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி ரசிகர்களை சம்பாதிப்பது தான் கஷ்டம். கீர்த்தி அப்படியொரு ஆர்டன்ட் பேன்ஸ் இருக்காங்க. அடுத்து தெலுங்கில் நடிக்கும் தசரா படம், தமிழில் மாமன்னன் படம் எல்லாம் இன்னும் அவங்களை உச்சத்தில் அமர வைக்கும்.

அந்த ரசிகர் ராம்குமார் சரியான வார்த்தைகளை பயன்படுத்திருக்காரு: “ரொம்ப அதிகமா ட்ரோல் செய்யப்பட்ட நடிகைனா அது இவங்க தான் அதையெல்லாம் மண்டைல ஏத்திக்காம தொடர்ந்து அவங்க இலக்கை நோக்கி முன்னேறி இன்னிக்கி தேசிய விருது நாயகிய விஸ்வரூபம் எடுத்து நம்ம முன்னாடி நிக்கிற கீர்த்தி அவர்களின் திரைபயணம் ஒரு சகாப்தம்❤️🔥”

வீடியோ:

Related Posts

View all