பெரிய சம்பவம் இருக்கும் போல.. கொல மாஸ்.. KGF யூனிவெர்ஸ் சலார்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Kgf video viral](/images/2023/07/06/prabhas-salaar-video-viral-1-.jpg)
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் சலார். பாகுபலி படத்துக்கு பின் பிரபாஸ் நடிப்பது எல்லாமே பான் இந்தியா படம் தான். ஆனால் எந்த படமும் பெருசா ரீச் கிடைக்கல. இந்த படம் அந்த ஸ்ட்ரீக் பிரேக் பண்ணும் என்று நம்புகிறோம். தெலுங்கில் பல ஹிட்டு கொடுத்தவரை கடைசியில் ஒரு ஹிட்டுக்காக எங்க வெச்சிருக்கு.
பான் இந்தியா ஸ்டார் ஆகிட்டாலே ஒரு ப்ரெஷர் வந்துவிடும். அவங்க அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு எல்லாமே எதிர்பார்ப்பு கூடும். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் கதை நல்லா சொல்வாங்க போல எடுக்கும்போது தான் சொதப்பிடுறாங்க. ராதே ஷியாம், saaho, ஆதிபுருஷ் இப்படி நடிச்ச எல்லா படங்களுக்கும் பெரிய வரவேற்பு இல்லை.
![Kgf video viral](/images/2023/07/06/prabhas-salaar-video-viral-2-.jpg)
கட்சி மூன்று படங்களில் saaho மட்டும் தான் கொஞ்சம் கன்வின்ஸ் பண்ற மாதிரி இருக்கும். நடிகர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் அவங்க மொழியில் படம் பண்ணி நல்ல கதை செலக்ட் செஞ்சு அதை பான் இந்தியா படமாக மாற்ற வேண்டும். மகேஷ் பாபு போன்ற நடிகர்கள் அதை தெலுங்கில் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க.
இந்த படம் KGF படத்தின் sequel அல்லது parallel உலகத்தில் நாடாகும் கதைக்களம் போலவே உள்ளாற்றது. படத்தின் கலர் கூட அப்படிதான். ராக்கி பாய் பிரண்டா கூட இருக்கலாம் இந்த சலார் பாய். பிரித்விராஜ் வில்லன் ரோல் பண்றாரா இல்லை என்னவென்று தெரியவில்லை ஆனால் மாஸாக இருக்கிறார். நாயகி சுருதி ஹசன். இயக்கம் பிரஷாந்த் நீல்.
வீடியோ: