அபிஷேக்கை பாத்தாலே விஜய் ஆண்டனி பங்கம் பண்றாரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Kolai pre release event video](/images/2023/07/10/abishek-vijay-antony-vibing-1-.jpg)
சினிமா ரசிகர்களுக்கு எல்லாருக்குமே தெரியும் அபிஷேக் ராஜாவை. முன்னாடி behindwoodsல இருந்தாரு, இப்போ அவரே சொந்தமா ஒரு சேனல் ஆரம்பிச்சு சினிமா ப்ரோமோஷன்ஸ், பிக் பாஸ்ல கூட கலந்துக்கிட்டாரு. அதற்குப்பின் நிறைய டிவி shows, நிறைய படங்களில் கெஸ்ட் appearance எல்லாமே பண்ணிருக்காரு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் ஆண்டனி reaction கொடுக்கிற மீம் ஒன்னு ரிலீஸ் ஆச்சு, அது செம்ம ட்ரெண்டிங். அவர் மூஞ்சியை அப்படி வெச்சதுக்கு காரணம் அபிஷேக் தான். opposite அவர் தான் பாட்டு பாடுறேன் என்று விஜய் ஆண்டனிக்கு சிரிப்பு காமிச்சிட்டு இருப்பாரு. ஆனாலும் சிரிக்காம கவனிப்பார் நம்மாளு.
![Kolai pre release event video](/images/2023/07/10/abishek-vijay-antony-vibing-2-.jpg)
பெரிய நடிகர்கள் படங்களை தவிர ஒரு படத்துக்கு தமிழ் சினிமா வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கிறது என்றால் அது இந்த விஜய் ஆன்ட்டனி படம் கொலை தான். 8 மதத்திற்கு முன்னாடி ட்ரைலர் ரிலீஸ் ஆச்சு, ஆனால் படம் இந்த மாதம் தான் ரிலீஸ் ஆகுது. ட்ரைலர் அவ்வளவு கிளாஸா இருந்தது. உலக தரம் என்று சொல்லலாம்.
தற்போது அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்ல தான் அபிஷேக்கை பங்கம் பண்ணிருக்காரு விஜய் ஆண்டனி. விஜய் ஆன்ட்டனி பாட்டு என்றாலே ஒரு வைப் தான். அதுவும் அந்த ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி.. பாட்டு எல்லாம் முரட்டு fun சாங். விஜய் ஆண்டனி வாய்ஸில் ஒரு மேஜிக் இருக்கு. அவர் பாட.. அபிஷேக் ஆடா.. அங்க ஒரே கூத்து.
Video:
Yoooov 🤣😂 @cinemapayyanpic.twitter.com/IlGmbHGLBk
— 𝐍𝐢𝐜𝐤𝐲 𝐁𝐡𝐚𝐢 👑 (@nickybhaai) July 10, 2023