வரலட்சுமி சிவப்பு புடவையை எடுத்து காட்டினாலே.. அம்மதியப்.. மிரட்றாங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kondraal pavam trailer video viral

சமீப காலத்தில் வரலட்சுமி நடித்த படங்களில் அவங்களுக்கு ஒரு சிவப்பு புடவையை கொடுத்திடறாங்க. அந்த புடவை காட்டினாலே அவங்களுக்கு ஒரு மாஸ் வந்திட்டுது, பார்க்க சும்மா தெய்வ லெவல் மாஸ். அதுவும் ஒரு சில கதாபாத்திரம் எல்லாம் ஒரு சிலர் பண்ணா தான் நல்லாயிருக்கும். பேச்சுக்கு சொல்லல, அது தான் நிஜம்.

இப்போ அவங்க நடித்திருக்கும் படம் கூட அப்படிப்பட்ட படம் தான். இவங்களை தவிர வேறு யாரு நடிச்சாலும் இவ்வளவு நல்லா இருந்திருக்குமா என்று தெரியவில்லை. நல்ல போல்டான கதாபாத்திரம் எல்லாம் இவங்க பண்ணும்போது தான் அந்த கதாபாத்திரத்துக்கே உயிர் வருது. இந்த படத்தில் கஸ்தூரி, சார்லி கூட முக்கியமான ரோல் பண்ணிருக்காங்க.

Kondraal pavam trailer video viral

மேலும், சர்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப்க்கு இந்த படம் முக்கியமான படமாக இருக்கும் என்று நினைக்கிறோம். அவர் இப்போ தான் சமீப காலமா நிறைய படங்கள் கமிட் ஆகிட்டு இருக்காரு. எல்லாம் நல்லா போகும்பட்சத்தில் இவருக்கு இந்த படத்தில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இசை சும்மா மிரட்டி விட்டிருக்காரு சாம்.

இந்த வீடியோவில் ஒன்னு கவனம் செலுத்தி பார்த்தீங்களா இல்லையா என்று தெரியவில்லை. இந்த படம் ஒரு பீரியட் படம். இந்த படம் கன்னட படத்தின் ரீமேக் வேற, பார்ப்போம் ஒரிஜினல் மாதிரியே பண்ணிருக்காங்களா இல்லை அதைவிட சிறப்பா பண்ணிருக்காங்களா என்று. வரலட்சுமிக்கு இன்னொரு ஹிட் ரெடி.

Video:

Related Posts

View all