கமல் சும்மாவா சொன்னாரு.. கோவை சரளா என்னும் நடிப்பு அரக்கி.. செம்பி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகை கோவை சரளா, அஷ்வின், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கும் செம்பி திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் அஸ்வின்க்கு பெரிய பிரேக்கா இருக்கும் என்று நம்புகிறோம். செம்பி டிரெய்லர் - வித்தியாசமான கெட்டப்பில், நடிப்பில் அசத்துகிறார் கோவை சரளா, அரசியல் பின்னணியில் ஒரு நல்ல படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மலைவாழ் மக்களின் துயரத்தை இந்த படம் விளக்கும். இது போன்ற திரைக்கதையை எழுதிய பிரபு சாலமன்க்கு பாராட்டுகள். அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணிற்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கு. அஸ்வின்க்கு இது முக்கியமான படம், பார்ப்போம் என்ன பண்ணுகிறார் என்று. ஆனால் ட்ரைலரில் ஸ்கோர் செய்தது கோவை சரளா தான். மாஸ் காட்டிட்டாங்க. பின்னி பெடல்.
தமிழ்சினிமா கோவை சரளா எனும் ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையை இத்தனைக் காலமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்த விடியோவை பார்த்தபின்னர் கண்டிப்பாக உங்களுக்கு அப்படி தான் தோன்றும். பிரபு சாலமன் படம் என்றாலே கொஞ்சம் காடு, மலை எல்லாம் சார்ந்து தான் எடுப்பார். அதனால் எப்போதுமே ஒளிப்பதிவு மிகவும் பிரமாதமா இருக்கும், அந்த வகையில் இந்த படமும் தபலா அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.
சிரிப்பூட்டி கண்களில் நீர் வர வைத்தவர் கண்களில், வலியில் நீர் வழியும் காட்சி. தரக்காட்டுல வாழுர உங்களுக்கு மலைக்காட்டுல வாழுர எங்கல பார்த்தா அருமையான வசனம். கோவை சரளா ஒரு ‘நடிப்பு ராட்சசி என்று உலகநாயகன் சும்மாவா புகழ்ந்திருக்காரு. அது உண்மையென இந்த வீடியோவில் காட்டிருக்காங்க அவங்க. நகைச்சுவை நாயகியா பலரை சிரிக்க வைத்தவர், இன்று உன்னதமான நடிப்பின் மூலம் நம்மை அழுகை வைக்கிறார்.
வீடியோ: