அட நம்ம கண்ணம்மா ரொமான்ஸ்ல பிச்சு உதறாங்க போங்க.. நீ மட்டும் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அட இந்த வீடியோ பார்க்க ஆரம்பிக்கும்போது இருந்தே அட இது நம்ம கண்ணம்மா தானே என ரொமான்ஸில் பிச்சு உதறாங்க என்று தான் சொல்ல தோன்றுகிறது. எப்போ பாரு விஜய் டிவி சீரியலில் அழும் மூஞ்சியுடன், ஒரு சீரியஸாவே பண்ணிட்டு இருந்த கண்ணம்மா அதான் ரோஷினிக்கு இது பயங்கர refreshing ஆக இருந்திருக்கும், அதான் மொத்த விதையும் இறக்கிட்டாங்க.
ஒரு பெண்ணுக்கு பையன் மீது காதல் வந்தால் அந்த பையனை எப்படியெல்லாம் ரசிப்பாள் என்று ஒவ்வொரு frameளையும் சூப்பரா காட்டிருக்காங்க. இயக்குனர் மற்றும் கேமராமேன்க்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். கேட்பதுக்கு நல்ல இசை, அதைவிட காட்சிகள் ரொம்ப அருமையாக இருக்கிறது பார்ப்பதற்கு. நமக்கே ஒரு பீல் கொடுக்குது.
காதல் பாட்டு அதெப்படி காதலை பற்றி பேசாமல் இருக்க முடியும். “நீ மட்டும் போதும்” என்பது காதல், “நீ இல்லை என்றாலும் உன் நினைவு மட்டும் போதும்” என்பது பெருங்காதல்! அப்படியொரு பீல் தான் கொடுக்குது இந்த பாடல்.
இன்னைக்கு ஒரு லேர்னிங்: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
உரை: ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
காலமெலாம் காதல் வாழ்க.
Video: