குடிக்காம தானாவே போதை ஏறுர வியாதி.. குடிமகான் நல்ல இருக்கில்ல கான்செப்ட்.. வீடியோ வைரல்.
அரசியல்வாதிகளை விமர்சிக்கும் ஒரு வார்த்தை என்னவென்றால் குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு என்பது தான். ஏனென்றால் நிறைய திட்டங்கள் பண்ணுகிறோம் என்று சொல்லுவாங்க, ஆனால் பண்ண மாட்டாங்க. சமீபத்தில் ஒரு அரசியல் தலைவரின் பேச்சை கூட,
ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராகவோ அல்லது முதல்வராக பதவி வகித்தவர் போலவா பேசுகிறார். தெருமுனை கூட்டத்தில் பேசும் நாலாந்தர பேச்சாளர் போல , தரமற்ற குடிகாரன் பேச்சு போல அல்லவா இருந்தது என்று தான் மக்கள் விமர்சித்தனர். ஆமா இப்போ இதெல்லாம் ஏன் சொல்றிங்க என்று தான் பாக்குறீங்க.
குடிமகான் என்று ஒரு படம். ஒரு சிலருக்கு குடிச்சா தான் போதை ஏறும், ஆனால் இந்த பையனுக்கு குடிக்காமல் போதை ஏறும் என்பது போல் ஒரு வியாதி. இதனால் இவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது தான் கதை. அதை செம்ம காமெடியா சொல்லிருப்பாங்க போல. ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு. சுரேஷ் மற்றும் சாந்தினி தான் தெரிந்த முகம், பின்னர் எல்லாருமே புதிய முகங்கள்.
பார்ப்போம் இயக்குனர் என்ன surprise நமக்கு வைத்திருக்கிறார் என்று. நாளைய இயக்குனர் பைனலில் ரன்னராக வந்தவர் என்பது குறிபிடித்தக்கது. இந்த உலகம் எப்போதும் முதலாவதாக வரும் இயக்குனரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளும், இரண்டாவது வந்தவரை மறந்து விடும். மறந்துவிட்டது. அப்படி மீண்டும் comeback கொடுக்கிறார் நீண்ட போராட்டத்திற்கு பின். இந்த படம் மட்டும் நன்றாக இருந்துவிட்டால் பெரிய சம்பவம் பண்ணும் என்பதில் சந்தேகமில்லை. மண்டேலா போல இருந்தால், இயக்குனரை மக்கள் மறக்கமாட்டாங்க.
Video: