மகள் சொன்னா கேட்டுக்கணும். தலைவனோட அந்த நடையே, சிரிப்பே வேற. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரல். இந்த படம் ரொம்ப சூப்பரா வரும் என்று மனது சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். கிரிக்கெட் பற்றி நிறைய படம் வந்துச்சி இதுல என்ன புதுமை பண்ண போறாங்க என்பதில் இருக்கு இந்த படத்தின் வெற்றி.
தமிழக அரசியல் படைப்பு இக்கால நீரோட்டத்தில் இடதுசாரி தத்துவம் சேர்ந்திருப்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த படத்தில் ரஜினி ஒரு அரசியல்வாதியாக நடிக நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த போஸ்டர் வெறும் கிரிக்கெட் விளையாட்டை மட்டும் சொல்லவில்லை, அதற்குமேல் எதோ இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி ஓகே சொன்னதுக்கு காரணம் முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவாக தான் இருக்கமுடியும்.
இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு நடிப்பது இந்த கதைக்கு பெரிய பலம் காரணம் இருவருமே கிரிக்கெட் நல்லா ஆட தெரிந்தவர்கள். முதன் கேஸ்டிங்கில் அடித்து தூள் கிளப்பியுள்ளார் ஐஸ்வர்யா சரியானவர்களை தேர்ந்து செய்து. அதேபோல் சப்போர்டிங் ரோல்களிலும் நல்ல நடிகர்களை செலக்ட் செய்தால் உய்ந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. கண்டிப்பா ரஜினிக்கு வெயிட்டா நாலு சீன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதிலிருந்தே கதை மிகவும் பவர்புல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. அனிருத்தை விட்டு ஐஸ்வர்யா அங்கு சென்றிருக்கிறார் என்றால் கண்டிப்பா பெரிய சம்பவம் காத்திருக்கு.