லியோ இன்டெர்வல் பிளாக் அந்த 8 நிமிஷம் அலறவிடும்.. தளபதி சம்பவம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..

Leo interval block update

தமிழ் சினிமா ஜெயிலர்க்கு பின் அடுத்து மிகவும் எதிர்பார்த்து இருக்கும் படம் லியோ. இப்போ ஜெயிலர் படம் 500 கோடி பக்கம் கிராஸ் பெண்ணிற்கு என்று சொல்லுறாங்க. அந்த படத்தின் சாதனையை ஒரு படம் முறியடிக்கும் என்றால் அது கண்டிப்பா லியோவா தான் இருக்கும். வேறு எந்த upcoming படத்துக்கும் நடப்பது சாத்தியமே.

ஜெயிலர் படம் எதிர்பாராத வசூல். படம் ஹிட் ஆகும் என்று கணித்தோம் ஆனால் 500 கோடி வசூல் எல்லாம் நினைக்கவே இல்லை. இங்க நான் தான் கிங்கு நான் வெக்கிறது தான் சட்டம் னு ரஜினி ஒன்னும் சும்மா பேசல, மனுஷன் 72வயதிலும் ஒரு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் கொடுத்திருக்காரு பாருங்க. அதை நம்ம பாராட்டியே ஆக வேண்டும்.

Leo interval block update

அவர் மீது அரசியல் ரீதியாக பல விமர்சனம் இருந்தாலும் சினிமாவில் அவர் இன்னும் கில்லி தான். லியோ தயாரிப்பாளர் லலித் கொடுக்கும் நேர்காணல் தான் இப்போ செம்ம வைரலா போயிட்டு இருக்கு. படத்துக்கு ஏற்கனவே செம்ம hype இருக்கு, இவர் மேலும் மேலும் பேசி நெருப்பில் எண்ணெய் ஊத்தி விட்டிருக்காரு.

எல்லாருமே லியோ படத்தை பற்றி பேசும்போது இது வேற மாதிரி படமா இருக்கும், நீங்க நினைக்கிறதே படத்தில் இருக்காது. உங்களோட எதிர்பார்ப்புகள் எல்லாம் வேற லெவெலில் வெச்சுக்கோங்க என்று எப்படி இவ்வளவு தைரியமா சொல்றாங்க என்று தெரியல. கொஞ்சம் பிசிறு தட்டுனா கூட சரிவு தான். யார் படத்திலும் லாஜிக் பாக்கமாட்டாங்க, விஜய்ன்னு வந்துட்டா போதும் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரிலாம் பேசுவாங்க.

வீடியோ:

Related Posts

View all