லியோ படத்தில் இணைந்த தரமான நடிகர்.. லோகேஷ் சம்பவம் போல. மிரட்ட போறாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமா அக்ட்டோபரில் ரிலீஸ் ஆகும் படத்துக்கு இப்போ முதலே எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால், தளபதி விஜயின் லியோ பாத்துக்கு தான். இந்த வருடம் ரிலீஸ் ஆகும் ஒரு படம் 500 கோடி வசூல் செய்யும் என்றால் அது கண்டிப்பாக இந்த படமாக இருக்கும். படம் மட்டும் எதிர்பார்ப்பை மீறிவிட்டது என்றால் அவ்வளவு தான் சம்பவமா இருக்கும்.
தற்போது கொஞ்ச நாட்களுக்கு முன் தான் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி பல கஷ்டமான காட்சிகளை படப்பிடிப்பு நடத்தினர். இந்த படக்குழு எப்போதுமே படம் ஆரம்பிச்சதில் இருந்து ரசிகர்களை எங்கேஜ் ஆக வைத்து கொண்டிருக்கின்றனர். ஒரு படத்துக்கு இவ்வளவு விளம்பரம் தேவை அப்போது தான் அது பான் இந்தியா படமா இருக்கும்.
ஒரு சிலர் சொல்வாங்க படத்துக்கு ப்ரோமோஷன் தேவை இல்லை என்று. ஆனால் அது எவ்வளவு முக்கியம் என்பது காந்தாரா, பதான் போன்ற படங்கள் சமீபத்தில் நிரூபித்தன. விளம்பரம் மூலம் படத்துக்கு நல்ல வியாபாரம் என்றால் அது RRR படம் தான். 1000 கோடி வசூல் ஆஸ்கர் விருக்கு, எப்போது தமிழ் சினிமா இப்படியொரு படம் தயாரிக்கும் என்று காத்துட்டு இருக்கோம்.
#Leo - Prominent Malayalam Actor #JojuGeorge is the latest addition to the casting👌🔥 According to the reports he have started shooting of his portions along with #ThalapathyVijay in Chennai என்று பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. இது மட்டும் உண்மையாக இருந்தால் படம் எதிர்பார்ப்பு எகிறிட்டே இருக்கு. அவர் விஜயை குஷி படத்தில் இருந்து பாலோ பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.