செங்கேணியா இது? எதிர்பாக்கல! மாடர்ன் ட்ரெஸ்ல கலக்கறாங்க! ஜெய் பீம் பட நடிகை லிஜோமோல் ஹாட் கிளிக்ஸ்!
லிஜமோல் ஜோஸ்ஸின் லேட்டஸ்ட் ரெஸ்டாரன்ட் கிளிக்ஸ்!! நடிகை லிஜமோல் ஜோஸ், செங்கனியாக தமிழில் அறியப்பட்டவர். அவர் ஒரு மலையாள நடிகை ஆவார். மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சித்தார்த்த் மற்றும் ஜி.வி பிரகாஷ் இணைந்து நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது எதார்த்தமான நடிப்பும் பேசப்பட்டது.
அதன் பிறகு நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெம் பீம் திரைப்படத்தில் செங்கனியாக நடித்தார். அத்திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. இவரது கதாபாத்திரமும் பெரிதும் பாராட்டப்பட்டது. அத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வாங்கினார்.
மேலும் அவர் “காதல் என்பது பொதுவுடைமை” மற்றும் “அன்னபூரணி” ஆகிய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “அன்னபூரணி” என்ற திரைப்படத்தில் அவருடன் லாஸ்லியாவும் இணைந்து நடிக்கிறார். அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. “சொந்த சோகங்களை ஒரு பெண் எப்போது எதிர்க்கத் துணிகிறாளோ அப்போது தான் அவள் அனைத்து பெண்களுக்குமான உரிமையை பேசத் தொடங்குகிறாள்” என்று கூறி அன்னபூரணி திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அவர் தமிழிலேயே பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்து உணவு உண்ணும்படியான புகைப்படத்தை வெளியிட்டுருக்கிறார். அப்புகைப்படத்திற்கு கமன்ட் செய்து வரும் ரசிகர்களுக்கு ரிப்ளையும் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.