என் கிட்ட வீடு, கார் இல்லாம போலாம்.. ஆனா.. பாவம் மனுசன் கண் கலங்கிட்டாரு.. வைரல் வீடியோ..!
நிலையற்ற தொழில் மற்றும் வியாபாரம் திரைத்துறை? இதில் மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும்,பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் அதே சமயத்தில் இரண்டையும் சேர்த்துவைத்து காப்பாற்ற வேண்டும்.
மேலும் காலத்திற்க்கேற்ப்ப கதைகளையும் மாற்றி திரைக்கதையை இக்காலத்திற்க்கேற்ப்ப புதுமையுடன் கொண்டு சென்று வெற்றியடைய வேண்டும். இயக்குனர் லிங்குசாமியின் திரைவாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
எப்படி?
இவர் முன்னர் ஆரம்ப காலத்தில் எடுத்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பின்னர் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டார். ஆனால் உத்தமவில்லன் படத்தில் அவருக்கு ஒரு சறுக்கல். சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்தார்.
அடுத்த எடுத்த படங்களும் சரியாக போகவில்லை.
தற்போது ‘தி வாரியர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விழா நேற்று நடந்தது. அதில் லிங்குசாமி பேசிய பேச்சு வைரல். வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
Viral Video: