இனி லோகி படங்களில் அனிருத் மட்டும்தான்! கைதி 2க்கு சாம் சி எஸ் இல்லை?

கூலிக்கு பின் வெற்றிக்கொடி வீசும் லோகேஷ் கனகராஜ் - அனிருத் தான் எங்களோட இசை உயிர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கூலி” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மாஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணி ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை அளித்திருக்கிறது.
இந்நிலையில், SSVM இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ், அனிருத் ரவிச்சந்தர் பற்றிய உணர்வுபூர்வமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது:

“எனக்கு இனி அனிருத் இல்லாமல் படம் எடுக்கவேனும் எண்ணமே இல்லை. அவர் சினிமாவிலிருந்து வெளியேறினால்தான் வேறு யாரையும் பற்றி யோசிப்பேன். எனக்கு பாடல்களில் AI வேண்டாம், ஏனெனில் எனக்கான இசை உயிரா அனிருத் இருக்கிறார்.”
இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, லோகேஷின் எதிர்பார்க்கப்படும் படம் “கைதி 2” குறித்து பெரும் ஆர்வம் எழுந்திருக்கிறது. முதல் பாகத்தில் இசையை சாம் சி எஸ் வழங்கியிருந்தாலும், இப்போது அனிருத் தான் இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“விக்ரம்”, “லியோ”, மற்றும் இப்போது “கூலி” வரை, லோகேஷ் - அனிருத் கூட்டணி பெரும் ஹிட் பாடல்களை, BGM-க்களை கொடுத்து வருகிறார்கள். இந்த ஜோடி இன்னும் பல மாஸ் படங்களை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.