தளபதி 67 பற்றி கேட்க வேண்டாம் என்று சொல்லியும்.. அரங்கம் அதிர அதிர மாஸ் காட்டிய மாணவர்கள். வீடியோ வைரல்.
நியூஸ்7 தமிழ் ஹெல்த் யூடியூப் சேனல் துவக்க விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதில் பல விஷயங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமான ஒன்று தளபதி 67 பற்றி அமைந்தது. அவர் எப்போதும் சொல்வது போல் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்பது தான்.
மேலும் அவர் பேசியது, பெண்களை மையப்படுத்தி கதை ஏன் எழுதவில்லை என்ற கேட்கின்றனர், அதற்காக வைக்கப்பட்ட கதாப்பாத்திரம் தான் விக்ரம் படத்தின் ஏஜண்ட் டீனா கதாப்பாத்திரம்.
போதைப்பொருள் வேண்டாம் என்ற விழிப்புணர்வு குறித்தும் பல விஷயங்களை பேசினார்.
அடுத்த படத்தின் அறிவிப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். அதுவரை சோசியல் மீடியாவிலிருந்து ஒரு குட்டி பிரேக் என்று லோகேஷ் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.