டிரெடிஷனல் தேவதை லாஸ்லியா தற்போது மாடர்ன் ஆகிவிட்டார். ஹாட் & ஸ்டைலிஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.
லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா.
அதுவரை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அதன் பிறகு மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் நுழைந்தார்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. பிக்பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு சோசியல் மீடியாவில் மவுசு கூடியது. ஏகப்பட்ட ஃபேன் பேஜ்கள் உருவாகி வந்தது. அவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். எப்படியும் வாரத்தில் இருமுறையாவது அவரது புகைப்படங்கள் வெளிவந்துவிடும்.
தற்போது “அன்னபூரணி” என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாஸ்லியா. இத்திரைப்படத்தில் அவருடன் லிஜமோலும் இணைந்து நடிக்கிறார். அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
ஆக, நம்ம லாஸ்லியாவும் இப்போ கவர்ச்சிக்கடலில் குதிக்க ரெடியாகி விட்டார். அதன் முதல் முயற்சியாக லைட்டாக ஒரு சேம்பிளை இறக்கி விட்டிருக்கிறார். லோ நெக் அவுட்பிட்டில் ரசிகர்களின் நெஞ்சங்களை பஞ்சாக்கி விட்டார்.