அடேய் நல்லா தானே இருக்கு இந்த சீன் ஏன் டெலீட் பண்ணாங்க. இவானா செம்ம க்யூட். லவ் டுடே லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாக்கு இந்த மாதம் ஒரு செம்ம மாதம் என்றே கூறலாம். இந்த வருடத்தின் முதல் பாதி அந்தளவுக்கு போகவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் வந்த ஒரு சில படங்களால் தமிழ் சினிமாவின் மனம் காக்கப்பட்டது. தெலுங்கு, கன்னட சினிமாக்கள் இந்த வருடம் பயங்கரம் டாமினேட் பண்ணி சென்று கொண்டிருக்கும்போது தமிழ் சினிமாவை காத்தது விக்ரம், பொன்னியின் செல்வன், தர்பார் போன்ற படங்கள் தான்.
தீபாவளிக்கு பின் ரிலீசான லவ் டுடே படம் இந்த வருடத்தில் ரிலீசான பெஸ்ட் படங்கள் வரிசையில் அதுவும் தன்னை இணைத்துக்கொண்டது. காரணம் பிரதீப்-ன் நடிப்பும் அவரது திரைக்கதையும் தான். இந்த படத்தை குறும்படமாக முன்னரே அப்பா லாக் என்று எடுத்திருந்தார், இருந்தாலும் இந்த கதையை முழு நீல படமாக எடுக்க நிறைய effort போடா வேண்டி இருந்தது. படத்தில் அவரே நடித்ததும் அவருக்கு ஒரு advantage, அந்த பையன் கதையில் எப்படி இருந்தானோ அதை அப்படியே திரையில் பிரதிபலித்தார்.
இந்த படத்தின் பாக் ஆபிஸ் வசூல் தான் நாளுக்கு நாள் அதிகமாகி போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு படத்தின் உண்மையான வெற்றி அங்கிருக்கிறது. படம் முதல் நாள் வசூல் செய்தால் அது படத்தின் நாயகனுக்காக, யூத் பசங்க வந்து சப்போர்ட் பண்ணினதால் என்று கூறலாம். ஆனால் இந்த படத்திற்கு மூன்றாவது நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து ரசித்து செல்கின்றனர். ஒரு படத்தின் வெற்றி அங்கு நிலைநாட்டப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றி பல சின்ன படங்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு ஒரு ஊன்றுகோல். ஏனெனில் கதை நன்றாக இருந்தால் 2 மனு நேரம் என்டேர்டைன் செய்தால் கண்டிப்பாக படத்துக்கு ஆடியன்ஸ் வருவாங்க என்று புரிய வைத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் deleted சீன் ஒன்று ரிலீஸாகி இணையத்தில் வைரல். அடப்பாவிகளா நல்லா தானே இருக்கு, இதை எதுக்கு remove பண்ணாங்க என்று தெரியவில்லை.
Video: