செம்ம படம்.. தியேட்டர்ல பாருங்க.. என்னடா பேர் அது ஓ* பாஸ்கர். லவ் டுடே செம்ம வீடியோ வைரல்.
இந்த படம் நான் எடுத்து கோமாளி படத்தின் ஆடியன்ஸுக்கு என்று பிரதீப் அப்போ சொன்னது புரியல இப்போ புரியுது. டீனேஜ் லவ்வு அப்படி இப்படி தான் இருக்கும் என்று நினைத்த போன ரசிகர்களுக்கு செம்ம surprise. அவ்வளவு ஜாலியா அடல்ட் கன்டென்ட் எதுவும் இல்லாம, ரொம்ப சூப்பரா எடுத்து வெச்சிருந்தாரு. கெட்ட வார்த்தை கூட அவ்வளவா இல்ல, mute தான் போட்டிருந்தாங்க. அதனால் ஜாலியா பேமிலி ஆடியன்சுடன் தாராளமா பார்க்கலாம்.
90க்கு ஒரு love today (1997)💔📼 2k க்கு ஒரு love today(2022)💔 📱📲 தீபாவளிக்கு PRINCE க்கு பதிலா இந்தப் படம் வந்திருந்தா செம்மையாக இருந்திருக்கும் என்பது பல ரசிகர்களின் கருத்து. பெரிய லெவெலில் ஹிட்டாகி இருக்கும். இந்த படத்தை மிக நீண்ட நாள் கழித்து நெருங்கிய நண்பர்கள் கூட்டத்துடன் பார்த்து ரசித்தோம். இது போல் ஒரு மழை காலம் திரும்பி வருமா என்று ஒரு ஏக்கம். ஏனென்றால் அனைவரும் இது போல சில விஷயங்களை அனுபவித்துவிட்டே வருவார். ஒரு சிலருக்கு அது ஆறாத வடு, மற்றவர்களுக்கு திரும்ப திரும்ப நினைத்து சந்தோச படும் நாட்கள்.
கண்டிப்பா இந்த பெரிய ஹீரோக்கள் படத்துக்கு ஈடா வசூல் செய்யும் இடத்தில் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. மொத்த படத்தின் செலவே ஒரு 10-15 கோடி தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. AGS நிறுவனத்திற்கு இந்த படம் பெரிய profit தரப்போகிறது. இதுவரை இவர் எடுத்த சின்ன படங்களின் வசூலை அசால்ட்டாக அடித்து நொறுக்கும். அதுவும் ஹீரோவாக பிரதீப்க்கு ஒரு நல்ல என்ட்ரி, இவனா படத்தில் செம்மா க்யூட்டா இருந்தாங்க. அவங்களோட சின்ன சின்ன expressions ரசிக்கும்படி இருந்தது.
Rating: 3.75/5
இந்த படத்தின் ப்ரோமோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க. செம்ம காமெடியான ப்ரோமோ அது. யாருக்கெல்லாம் பாஸ்கர் அப்டின்னு பேர் இருக்குதோ, அவன் எல்லாம் செத்தான். இனி எல்லாரும் அவனை ஓ* பாஸ்கர் அப்டின்னு தான் கூப்பிட போறாங்க.
Video: