கதாபாத்திரங்களா இரண்டு பேரும் வாழ்ந்திருக்காங்க.. உத்தமன் பிரதீப், நிக்கிதா. லவ் டுடே லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு ரசிகரின் கமெண்ட் எங்களுக்கு ரொம்பவும் புடிச்சது. அதை வைத்து இந்த கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று. நம்மள விட பெரிய யுவன் ரசிகரா இருப்பார் போல,
My Eyes - Closed for a while 👁️ My Ears - Listening this Song 🎶 My Hand - increasing volume 🎚️ My brain - dreaming 💭 My mouth - humming the rhythm 🥵 My nose - slowly going to deep breath 👃 My heart - addicted to song 💯 Finally this song takes me to heaven. ❣️
லவ் டுடே படம் ஒரு விஷயத்தை நன்றாக உணர்த்தியுள்ளது. அது என்னவென்றால், சின்ன படம் பெரிய படம் என்பது கிடையது ட்ரெண்ட்க்கு ஏத்த மாதிரி படம் எடுத்து சரியான முறையில் மார்கெடிங் செய்தால் படம் ஜெயிக்கும் என்று. முக்கியமான விஷயம் கதை நன்றாக இருக்க வேண்டும், அதைவிட முக்கியம் திரைக்கதை செம்மையா இருக்கவேண்டும். இது எல்லாமே இந்த படத்துக்கு சூப்பரா அமைஞ்சிருக்கு. அதனால் இந்த படத்தின் வெற்றி மொழி வேறுபாடு இல்லாமல், எல்லாராலும் கொண்டாடப்படுது.
இந்த படம் உணர்த்தியுள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால், படம் சூப்பரா வந்திருப்பதால், படம் பார்த்த 99% பேருக்கு மகிழ்ச்சி. ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், எல்லாரையும் திருப்தி படுத்துவது போல் ஒரு படம் எடுக்கவே முடியாது. மேலும் இந்த படம் நல்லா இருந்ததால் படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசி பேசியே அந்த படத்துக்கு வேற லெவல் ரீச் கொடுத்துவிட்டனர் மக்கள். இப்போ தெலுங்கில் டப் செய்து அங்கேயும் சக்கைபோடு போட்டு வருகிறது.
தற்போது எல்லாருடைய பேவரைட் சாச்சிட்டாலே சாங் வீடியோ இணையத்தில் வைரல். யுவனுக்கு ஒரு முரட்டு comeback கொடுத்த படம் இது. அதுவும் என்னை விட்டு போனாலும் பாட்டெல்லாம் கண்ணை மூடி கேட்டல் அழுகை வந்துவிடும், அப்படியிருக்கிறது அவருடைய இசை.
Video: