அவ்ளோ பெரிய படம் இல்லையே அது. என்ன ரஜினி இவர் கூட கமிட் ஆயிருக்காரு? முழு விவரம்.

Lyca superstar movie update viral

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் என்ற தலைப்பு வைத்தவுடன் எதாவது ஹாலிவுட் பாணியில் வெளிநாடுகளில் நாடாகும் கதை என்று நினைத்தோம், ஆனால் பக்கா லோக்கல் தான் கதை. விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று உழைத்து வருகிறார். கண்டிப்பாக இந்த படம் வேற லெவெலுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரஜினி இளம் இயக்குனர்களை நம்புவது பாராட்டக்குரிய விஷயம்.

அந்த நம்பிக்கை வீண் போகாமல் பார்த்துக்கொள்வது இயக்குனர்கள் கடமை. வளர்ந்து வரும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு சின்ன ஹீரோக்கு படம் செய்தால் நன்றாக எடுத்து விடுகிறார்கள். விஜய், அஜித், ரஜினி போன்ற நாயகர்களை வைத்து இயக்கும் போது தான் பிரச்சனையே. பீஸ்ட் படகில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தால் இவ்வளவு கடுமையான விமர்சனம் வந்திருக்காது.

Lyca superstar movie update viral

மீண்டும் சிவகார்த்திகேயன் இயக்குனரான சிபி தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. டான் படம் நல்ல படம் தான், அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் வரும் எமோஷனல் சீன் இல்லையென்றால் படம் ஓத்திருக்கு, அப்படியிருக்கையில் எப்படி ரஜினி அந்த பையனை நம்பி படம் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு படத்தை வைத்து நாம் அந்த இயக்குனரின் திறமையை எடைபோட முடியாது. பெரிய பொறுப்பு, நன்றாக எடுத்துவிட்டால் அடுத்தடுத்து பெரிய படங்கள் கமிட் ஆகலாம்.

இந்த சிபி படத்தை முடித்துவிட்டு மீண்டும் சூப்பர்ஸ்டார் நடிக்கும் அடுத்த படம் லைக்கா நிறுவனத்திற்காக தான். அந்த படத்தை இயக்கவுள்ளது ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் ரஜினி அதில் கேமியோ தான் செய்கிறார். அதுவும் extended கேமியோ என்று சொல்லப்படுகிறது. அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.

Related Posts

View all