நீங்க என்னமா அவர் குடுத்த பார்ட்டில ஜாலி பண்ணிட்டு இருக்கீங்க.. மாளவிகா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Malavika in kartik aryan bday bash](/images/2023/11/23/malavika-kartik-aryan-video-2-.jpg)
தமிழ் சினிமா மூலம் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகை யார் என்று லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா மாளவிகா மோகனன் தான் டாப்பில் இருப்பாங்க. அவங்கலோட சினிமா வாழ்க்கை பாருங்களேன் முதல் படம் சூப்பர்ஸ்டார் கூட, அடுத்த படம் இந்த காலத்து சூப்பர்ஸ்டார் கூட, அதற்கடுத்த படம் வருங்கால சூப்பர்ஸ்டார் கூட. யாருக்கு அமையும் இப்படி.
ரஜினி, விஜய், தனுஷ் தான் அது. இப்போ விக்ரம் கூட தங்கலான் படம் நடிச்சு அது ரிலீசுக்கு தயாராகி இருக்கு. இதில் இவங்களோட ரோல் ரொம்ப பெருசா பேசப்படும் என்று நம்புகிறோம். இவங்க செம்ம டான்சர், ரொம்ப அழகு இருந்தாலும் இவங்க நடிப்பு முழுதாக வெளிவரவில்லையே என்று ஒரு விமர்சனம் இவங்கமேல் இன்னும் இருக்கு.
![Malavika in kartik aryan bday bash](/images/2023/11/23/malavika-kartik-aryan-video-1-.jpg)
ஆனால் தங்களால் படம் மூலம் முரட்டு comeback கொடுப்பாங்க என்று நினைக்கிறோம். சமீபத்தில் வெளியான டீசர் படகின் மீது பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. அதேபோல் இவங்க கதாபாத்திரம் மேலேயும் அதிக எதிர்பார்ப்பு, பா. ரஞ்சித் படம் என்பதால் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு ரொம்ப நல்லா எடுத்திருப்பார் என்று.
இந்தநிலையில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று தனியார் இடத்தில நடந்தது. அதில் கருப்பு outfitல சும்மா நெருப்பு மாதிரி கலந்துக்கிட்டாங்க மாளவிகா. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். பாருங்க எவ்வளவு தீயா இருக்காங்க என்று.
Video:
🕕❗️मालविका मोहनन कार्तिक आर्यनच्या बर्थडे पार्टीत सहभागी होती #MalavikaMohanan #attend #KartikAaryan #birthdayparty #Bash @teammalavika @TheAaryanKartik pic.twitter.com/viy0S2UX2a
— RNO | Right News Online मराठी (@RNO_OfficialM) November 23, 2023