மலையாளம் & மலையாள பெண்கள் எப்போவுமே செம்ம காட்டு. மல்லு கேர்ள் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மலையாளம் அழகு.. மலையாள பெண்கள் அழகு.. அழகான பெண் மலையாளம் பேசினால் பேரழகு. எப்போதுமே தமிழ் பசங்களுக்கு மலையாள பெண்கள்னா அவ்வளவு பிடிக்கும். அதுவும் ஓணம் எல்லாம் வந்துவிட்டால் போதும் சின்ராசுகளை கையில் பிடிக்க முடியாது. கவிதையாய் அழகை வர்ணிச்சு பிரித்து மேய்ந்துவிடுவார்கள். எல்லாருமே அப்போ தனக்குள் இருக்கும் கவிஞன் வெளிய வந்துவிடுவான்.
ஜீவா, காஷ்மீரா நடிக்கும் புதிய படமான வரலாறு முக்கியம் படத்தின் முதல் சிங்கிள் ‘மல்லு கேர்ள்’ஓட வீடியோ சாங் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கு. பாடலுக்கு மல்லு கேர்ள் என்று பெயர் வைத்ததாலேயே அந்த பாட்டோட செட்டப் அப்படியே கேரளத்தை கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. கெரகளத்தில் என்னென்ன பேமஸோ முடிந்தளவு எல்லாமே காட்டிருக்காங்க. காஷ்மீரா செம்ம அழகை இருக்காங்க.
லட்சணம் என்ற வார்த்தை. தமிழ் பெண்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார்த்தை.
உலகம் சொல்ற மாதிரி மலையாள பெண்கள் பார்க்க அழகானவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழ் பெண்கள் பார்ப்பவர்களுக்கு லட்சணமா இருப்பார்கள் என்பது நம்முடைய பெண்களின் கருத்து. சும்மா சொல்லக்கூடாது அதை நாம் ஓத்துக்கிட்டு தான் ஆகணும். இப்படி எல்லாம் அவங்க பேசுவதற்கு காரணமே நாம் அவங்களை காண்டு ஏத்துவது தான். அதுவும் ஒரு ஜாலி தான்.
இந்த படமும் இப்படி நாம் பேசுவது போலயே ஜாலியாக இருந்தால் படம் செம்ம ஹிட் ஆகும். ஜீவாவோட ஸ்ட்ராங் zone கூட அது தான். அசால்ட்டா நடிச்சுட்டு போயிட்டே இருப்பாரு, அந்த மாதிரி ரோல் எல்லாம். இந்த படம் அவருக்கு பிரேக் கொடுத்து மீண்டும் முன்னணி நாயகர்கள் லிஸ்டில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாள் கொஞ்சம் அவருக்கு மிஸ் ஆயிடுச்சு படங்கள் எல்லாம். இந்த படம் அதை மற்றும் என்று நம்புகிறோம்.
Video: