சொல்லுங்க மாமாக்குட்டி...லாங் ரைய்டு போலாமா.. ஒரு வழியா விட்டுட்டாங்க.. லவ் டுடே அந்த வீடியோ வைரல்.
ரொம்ப வருடத்துக்கு பிறகு வயிறு வலிக்க சிரிக்க வைத்த, அழுகை வைத்த, எமோஷனல் ஆக வைத்த திரைப்படம் என்றால் அது லவ் டுடே தான். அதுமட்டுமில்லாமல் வெறும் 5 கோடியே போட்டு எடுத்த படம், 50 கோடி வசூல் செய்திருக்கிறது என்றால், எவ்வளவு பெரிய விஷயம். நடிகராகவும் செம்ம மாஸ் பண்ணிட்டாரு பிரதீப், அடுத்தடுத்து படங்களில் இவரின் நடிப்பு அவதாரத்தை கூட பார்க்கலாம்.
டாக்ஸிக் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டையிடம் திட்டு வாங்காமல் படம் எடுத்துவிட முடியுமா என்று நினைத்த இயக்குனர்களுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. அவர் வாயில இருந்து சமீபத்தில் வெளிவந்து பெரிய ஹிட்டான பொன்னியின் செல்வன், விக்ரம் படத்துக்கே நல்ல review தாராள, ஆனால் இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.
நீ பறவாயில்லன்னு சொன்னாலே படம் நல்லாருக்கும்😅 நீ நல்லாருக்குன்னு சொன்னா😳😳😳 படம் வேறலெவல் போங்க👌 என்று நினைத்துக்கொண்டே பல பேர் இந்த படத்தை திரையரங்கில் போய் பார்த்து என்ஜாய் பண்ணாங்க.
நம்முடைய காதலி கூட அவங்களோட பாய் bestie பேசுனாலே நமக்கு சுர்ரென்று ஏறும். ஆனால் அந்த பாய் bestie கூட அவுட்டிங் போனால் எப்படி இருக்கும் என்பதை பிரதீப் இந்த சொல்லுங்க மாமாக்குட்டி பாடல் மூலம் மொத்த பசங்களோட reaction அனைத்தையும் கொண்டுவந்துவிட்டார். ரொம்ப எதார்த்தமா இருந்ததால் தான் இந்த படம் ஹிட் ஆச்சு, இல்லையென்றால் டவுட் தான். ஆனாலும் ஒரு சில பெண்களுக்கு ஒருபாட்சமாக இருப்பதாக குறை சொன்னார்கள், அது இருப்பது தான்.
Video: