மாமன்னன் படத்தில் இவங்க இரண்டு பேருக்கும் என்ன ரோல்.? வாள் தூக்கி நின்னான் பாரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mamannan glimpse video viral

கொடியன்குளம் சம்பவத்தை கதையாக வைத்து கர்ணன் திரைப்படம் எடுத்துள்ளார்கள் என்ற கருத்து படத்தின் ரோல்ஸ் போது இருந்தது. ஆனால் ஒரு சிலர் கர்ணன், 1995 ல் நடந்த கொடியங்குளம் பிரச்சனையைப் பற்றிய கதை அல்ல, 1997 ல் பண்ருட்டி மாவட்டம் காட்டுக்கூடலூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக்க் கொண்ட படம் என்றும் படத்தின் ரிலீஸ் போது சொன்னார்கள்.

அப்போது படம் பார்த்து நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு மாற்றுக்கருத்து இருந்தது. அது என்னவென்றால், கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை அன்று செய்துள்ளனர் என்று ட்வீட் போட்டார்.

Mamannan glimpse video viral

அன்று சத்தியமாக யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குவது மாரி செல்வராஜ் என்று. தற்போது இருவரும் சேர்ந்து ‘மாமன்னன்’ படத்தை எடுத்துமுடித்துள்ளனர், உதயநிதியின் பிறந்தநாளான நேற்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்திருக்கிறது. ரிலீஸ் ஆனவுடனையே நம் முகத்தில் தோன்றியது என்ன கர்ணன் வடை அடிக்கிறது என்று.

ஏனெனில் கடைசியில் வாள்/கத்தியை வைத்து உதயநிதி ஏதோ சம்பவம் செய்வது போல காட்சி அது. அதை படித்தவுடன் நம் நினைவுக்கு வந்த வரிகள் “வாள் தூக்கி நின்னான் பாரு… வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை” என்ற வரிகள் தான்.

ஏன் நாம் மாஞ்சோலை படுகொலை சம்பவத்தை கதையாக வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது இப்போ இருக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்வார்களே. இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததா என்று என்ற கருத்தும் இந்த வீடியோக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

மகுடம் சூட வருகிறார் மாமன்னன்:

Related Posts

View all