கமலோட 232வது படம் விக்ரம்.. 234வது படம் மணிரத்னம் கூட. அப்போ 233?? முரட்டு அப்டேட். முழு விவரம்.

Maniratnam kamalhaasan project update

கமல்ஹாசன் நடிக்கும் 234வது படத்தை இயக்குகிறார் மணிரத்னம்; இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பு. இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். 35 ஆண்டுகளுக்குப்பிறகு கைகோர்க்கின்றனர் கமல்ஹாசன் - மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரை கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குனது எச்.வினோத் தான் என்று பேச்சு அடிபட்டு வந்தது. ஐயோ அவர் எப்படி இயக்குவாரு. துணிவு படத்தை முடித்தபின், அவர் விஜய் சேதுபதியுடன் தான் படம் பண்ண போகிறார் என்ற பேச்சு அடிபட்டது. அது எல்லாம் இல்லை, கமல் தான் confirm பண்ணிருக்காரு என்று சொல்லி வந்தனர். இதனால் கமல் ரசிகர்கள் எதையோ எதிர்பார்த்து, ஆனால் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஒரே அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா உலகும் அதை பற்றி தான் பேசுகிறது.

Maniratnam kamalhaasan project update

உலகநாயகனின் 232வது படம் தான் விக்ரம், இவரின் 234வது படம் மணிரத்னம் கூட, நேற்று அந்த அறிவிப்பு வந்திடுச்சு. அப்போ 233வது படம் யாரு இயக்க போறாங்க என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ட்ராக்கர்ஸ் எல்லாம் சொல்வது போல தான் 233வது படத்தை இயக்கப்போவது எச்.வினோத். துணிவு படத்தின் ரிலீசுக்கு பின், பிப்ரவரி மாதம் அந்த படத்திற்கான வேலைகள் தொடங்கும்.

இப்போ தான் “நாயகன் மீண்டும் வர்றார்..” அந்த பாட்டு உண்மையாகவே நிஜம் ஆகியிருக்கு. எப்படிப்பட்ட இயக்குனர்கள் இருக்காங்க லைன்அப்ல. இதுபோக இந்தியன் 2 படம். அதோட 70நாள் ஷூட்டிங் மட்டும் தான் பாக்கி போல. தமிழ் சினிமாவை மீண்டும் ஆள வருகிறார் உலகநாயகன்.

Related Posts

View all