*த்தா செய்றோம் என்று சொன்ன மஞ்சு வாரியர்.. அதுவும் லைவ் நிகழ்ச்சில. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அஜித் மட்டும் தான் இல்ல மற்றபடி துணிவு படத்தின் ப்ரோமோஷன்ஸ் படு வேகமா நடந்து கொண்டிருக்கிறது. இது தான் அஜித் படத்துக்கு நீண்ட நாள் கழித்து எல்லா platformகளிலும் படு ஜோராக ப்ரோமோஷன் போயிட்டு இருக்குபோது. எச்.வினோத் கொடுத்த காணொளி லாஸ்ட் பால் சிக்சர் மாதிரி ரொம்ப சூப்பர் ப்ரோமோஷனா மாறிடுச்சு. வலிமை ரிலீஸ் அப்போ கூட அமைதியா இருந்த மனுஷன், இப்போ பேட்டி கொடுக்கிறார் என்றால்..
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க தீரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு சம்பவம் பண்ணிருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு இயக்குனர் இவ்வளவு confident-ஆ இருந்தாலே அந்த படத்தின் ஓப்பனிங்க்கு பெரிய லாஸ் தான். வாரிசு படத்தை பொறுத்தவரை இயக்குனர் அதுவும் ரொம்ப நாட்களுக்கு முன்னர் ஒரே ஒரு இன்டெர்வியூ தான் கொடுத்திருக்காரு. ஆடியோ லாஞ்சுக்கு பின் வேற எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத்துக்கு நிகராக பல சேனல்களில் படத்தை ப்ரொமோட் செய்வது மஞ்சு வாரியர் தான். இவங்க இந்த படத்தில் அஜித்துக்கு நிகராக action பண்ணிருப்பாங்க என்றும் சொல்லப்படுகிறது. சில காட்சிகள் பார்த்தோம், சமீபத்தில் வந்த ட்ரைலரில். அதுவே படு பயங்கரமாக இருந்தது. அதனால் இந்த படம் நம்ம என்ன நினைக்கிறோமோ அதை தாண்டி தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.
*த்தா செய்ரோம் என்ற வசனம் வரும் துணிவு ட்ரைலரில், அதேபோல கட்சியை சமீபத்தில் நடந்த டிவி இன்டெர்வியூல re create பண்ணிருக்காங்க மஞ்சு. அவங்க சொன்ன அந்த வார்த்தையை அப்படியே mute பண்ணிட்டாங்க கலைஞர் டிவி. எச். வினோத் பயங்கரமா கைதட்டி சிரிப்பார். மஞ்சுவே சொல்லி முடிஞ்சபின் mute பண்ணிடுங்க என்று தான் சொல்லுவாங்க. செம்ம காமெடிய அது. அந்த வீடியோ வைரல்.
Video:
#Thunivu #ManjuWarrier .. 😃🤣pic.twitter.com/gpYhegWDb2
— VCD (@VCDtweets) January 8, 2023