வீட்லையே உக்கார சொல்றீங்களா.. விஜய் பற்றி கேள்வி... பத்திரிகையாளர்களை தெறிக்க விட்ட மன்சூர் அலிகான்.. வீடியோ வைரல்.
தளபதி விஜய் இந்திய சினிமாவின் ஒரு முக்கியமான நடிகர். அவர் மட்டும் தான் என்ன பண்ணாலும் ட்ரெண்ட்லையே இருப்பாரு. அதுமட்டுமில்லாமல் அவரைப்பற்றி செய்தி ஊடங்களில் வரும்போதெல்லாம் தான் அந்த ஊடகத்துக்கே பெரிய ரீச் கிடைக்குது. சின்ன போட்டோ லீக் ஆனால் கூட போதும் அது இந்திய அளவில் ட்ரெண்ட் confirm.
அப்படிப்பட்ட அவர் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றால் எப்படி இருக்கும் ரீச்சு. சும்மா அவருடைய ரசிகர்கள் மிரட்டிவிடமாட்டாங்க. அவர் இன்னும் அரசியலுக்கு வரேன் என்று சொல்லவில்லை ஆனால் அவர் நகர்த்தும் ஒவ்வொரு விஷயமும் அவரின் வருகையை எதிர்நோக்க சொல்கிறது. வந்தால் மூன்றாவது பெரிய கட்சி ஆக வாய்ப்பிருக்கு.
விஜய் உடன் நடித்தவர்கள் எங்கு சென்றாலும் ரீச்காக இந்த ஊடகங்கள் என்ன கேள்வி கேட்கின்றனர் என்றால் அவருடைய அரசியல் வருகையை எப்படி பாக்குறீங்க என்று. அப்படிதான் நடிகர் மன்சூர் அலிகானிடம் கேட்டிருக்கின்றனர். அவரு யாரு, இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டால், கேட்டவங்கள தெறிக்க விட்ருவாரு.
இவர்கிட்ட ஏண்டா அந்த கேள்வியை கேட்டோம் என்ற நிலைக்கு வந்திடுவாங்க. அப்படிதான் இப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கு. அவர் கேட்கும் கேள்வியும், இவருடைய பதிலும் இப்படித்தான் செய்தியாளருக்கு ரிப்ளை செய்ய வேண்டும் என்று சொல்ல வைக்கிறது. இவரை லோகேஷ் லியோ படத்தில் எப்படி யூஸ் பண்ணிருக்காரு என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
Video:
Mansoor bhai answers 😂😂 .. Madly waiting to see how Loki used him in #Leo 😂🔥@actorvijay pic.twitter.com/uqvk3Rus52
— Vijay Team Online (@VijayTeamOnline) August 29, 2023