ஆண்ட்ரியா வேற லெவல் சம்பவம் பண்ண போறாங்க.. அறம் எடுத்த இயக்குனர். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Manushi latest movie update

கோபி நயினார் அறம் திரைப்படத்தில் கேட்ட கேள்வி இன்றும் நிலைக்கிறது " ராக்கெட் அனுப்பும் விஞ்ஞானம் இருக்கும் நாட்டில், ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சட்டென மீட்க வசதிகள் இல்லை". இந்திய சமூகத்திற்கு தன் கலை வழியே “அறம்” கற்பித்த இயக்குனர் கோபி நயினார் அவர்களின் அடுத்த படைப்பு #மனுசி வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பு.

ஒரு கார்ப்பரேட் ஒரு வேலையை தொடங்குகிறான் என்றால் அதில் பல விசயங்கள் அடங்கி இருக்கிறது. வட இந்திய முதலாளிகள் தென் இந்தியாவின் வளங்களை சுரண்டுகிறான் என்பது ஒரு வகையான வேலை திட்டம், ஆனால் இங்கே இருக்கும் தமிழ்தேசிய அமைப்புகள் அதை பற்றி பேசுவதே இல்லை என்பது இவரின் ஆழமான கருத்து. இவர் பேசும்போது எப்படி ஷார்ப்பா பேசுகிறாரோ அப்படி தான் அவரின் படங்களும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Manushi latest movie update

ஆதிக்கத்திற்கு எதிராக.. சுரண்டலுக்கு எதிராக… அரச பயங்கரவாதத்திற்கு எதிராக வரிசையாக படங்கள் வந்து வெற்றி பெறும் இந்த தருவாயில் நான் எதிர்பார்ப்பது அண்ணன் கோபி நயினார் அவர்களிடம் இருந்து ஒரு திரைப்படம். இந்த மண்ணுக்கான மக்களுக்கான அரசியல் பேசும் அத்தனை கதைகள் அவரிடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அறம் படம் மூலமாகவே அதை நிரூபித்து விட்டார். மனுசி படம் மூலம் என்ன செய்ய காத்திருக்கிறாரோ?

தயாரிப்பாளர் தோழர் திரு.வெற்றிமாறன் அவர்களுக்கும், முதல் பார்வை வெளியிட்ட நடிகர் திரு.சூர்யா அவர்களுக்கும் இயக்குனர் திரு.கோபி நயினார் அவர்களுக்கு ஒளிப்பதிவாளர் திரு. எட்வின் சகாய் அவர்களுக்கு மற்றும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

HD PIC:

Related Posts

View all