மாரி செல்வராஜ் கமல் மீது வைத்தது குற்றச்சாட்டு அல்ல. அக்மார்க் 100 % வன்மம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mari selvaraj latest video viral

மாரி செல்வராஜ் கமல் மீது வைத்தது குற்றச்சாட்டு அல்ல. அக்மார்க் 100 % வன்மம். தேவர் மகன் , பாபநாசம் இரண்டு படத்தையும் வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து அதை கமல் அவர்கள் மீது திருப்பி விட முயற்சி செஞ்சிட்டு வரார். ஏன் என்று தான் புரியல? உங்களுக்கும் புரியாது கீழே இருக்கும் வீடியோ பார்க்கவில்லையென்றால்.

மாரி செல்வராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்த கமல் ரசிகர்:

மாரி செல்வராஜ் அவர்களே,

பாபநாசம் படத்தையே ஒழுங்கா புரிஞ்சுக்காத நீங்க எங்க இருந்து தேவர்மகன புரிஞ்சிக்குறது.. நீங்கள் வன்மத்தை கக்கிய தேவர்மகன் படம் 30 வருஷம் முன்னாடி வந்த அன்றைய காலகட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு எடுக்கப்பட்டது..!!!

வேறு எந்த சமூகத்தையும் இழிவாக காமிக்கவில்லை.. சக்திவேல் அறிமுக காட்சியே ட்ரைன்ல இருந்து வரும் போது முழுக்க கருப்பு உடை அணிந்து “தான் என்ன மாதிரி சித்தாந்தம் கொண்டவன் என்று உடையிலே காட்டியிருப்பார்.. அவர் தன் தந்தையின் சாதிப்பற்றை, தான் பிறந்த கிராமத்தின் பிற்போக்கை எப்படி கையாண்டு, காப்பாற்றி மீட்டெடுக்க போகிறார் என்பதே கதையின் இலக்கு..

மாரி செல்வராஜ் சிந்தனை வட்டம் தான் என்ன " ஒரு நியாயத்தை ஒடுக்கப்பட்ட குரலில் இருந்து தான் ஒலிக்க வேண்டுமா " ஒரு மாயன் கதாபாத்திரத்தை தலித் கதாபாத்திரம் எதிர்த்து சண்டையிட்டு தலையை துண்டித்து இருந்தால் திருப்தி அடைந்திருப்பாரா.. அது ஒரே சமூகத்தைச் சேர்ந்த சக்திவேலே செய்தது தான் இவருக்கு இத்தனை ஆண்டு காழ்புணர்ச்சியா..!!!

Mari selvaraj latest video viral

முதலி்ல் கமல்ஹாசன் அவர்களை, அவருக்கு இருக்கும் 60 ஆண்டு கால அனுபவத்தை, அவர் சமூக பார்வையை புரிந்து கொள்ளுங்கள், அவர் படங்கள் தேவர்மகன், விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம் இது எல்லாமே சற்று ஆழம் சென்று பார்த்தால் கமல்ஹாசன் கையாண்ட யுக்தியை கவனிக்க வேண்டும்

தன்னை தானே விஷப் பரீட்சை செய்து கொள்வார்.. கமல்ஹாசன் எப்போதும் அந்த சமூகத்தின் கதாபாத்திரமாகவே சென்று அதில் இருக்கும் நிலைகெட்ட அரசியலை, கொள்கையை, வன்முறையை, தவறான சித்தாந்தத்தை வெளிச்சம் போட்டு காட்டி அதில் இருந்து எப்படி நியாயத்தை உணர்கிறான் என்பதே கமல்ஹாசனின் யுக்தியாக இருக்கும்.. அதை ஒரே சமூகத்தைச் சேர்ந்தவனே இதை செய்தால் இன்னுமே உரைக்கும் என்பதே கமல்ஹாசனின் யுக்தி!!! லோக்கலா சொன்னா அவன் பொருள எடுத்து அவனையே போடுறது தான் ஆண்டவர் ஸ்டைல்!!!

மாரியின் சிந்தனை வட்டம் என்னவென்றால்

“தேவனா இருக்குறது முக்கியமா மனுசனா இருக்குறது முக்கியமா என்ற வசனத்தை ஒரு கர்ணன் தான் கேட்க வேண்டும், அதை சக்திவேலே கேட்க கூடாது

போயி புள்ளைங்கள படிக்க வைங்கடா என்ற வசனத்தை ஒரு பரியேரும் பெருமாள் தான் சொல்ல வேண்டும் அதை சக்திவேலே சொல்ல கூடாது. இது ஒரு நல்ல அரசியல் நிலைப்பாடு இல்லை மாரி செல்வராஜ்.. ஒரு தலித்தாக இருந்து தான் சோகத்தை உணர வேண்டும் என்பது கிடையாது.. அடிப்படை மனிதமே போதுமானது!!!கமல்ஹாசன் சொன்னதும் , மாரி செல்வராஜ் சொல்ல நினைப்பதும் ஒரே கருத்து தான் அதை சொல்லும் விதம் தான் வேறு..

அதுவும் பல நேரங்களில் கமல்ஹாசன் சொல்லும் ஒரு கருத்து “ஒரு மதுவிலக்கு பத்தி படம் எடுக்கனும் னா கதாநாயகன் குடிகாரனா தான் இருக்கனும்” ஒரு நோயோட பேர சொல்லாம வியாதிய குணப்படுத்த முடியாதுன்னு அவர் சொல்லாத பேட்டிகள், மேடைகள் இல்லை.., அதை தான் நான் தேவர்மகன்ல செஞ்சன்னு சொல்வார்..

இதற்கே பரியேரும் பெருமாள் பார்த்துட்டு முதல்ல பாராட்டியது ஆண்டவர் தான்..

நீங்கள் எந்த அர்த்தத்தில் மேடையில் வஞ்சப்புகழ்ச்சி செய்தாலும் உங்களை அந்த தங்கமனம் கொண்டவர் வாழ்த்திக் கொண்டே தான் இருப்பார்.. பரியேரும் பெருமாள் முதல் மாமன்னன் வரை உங்களை வாழ்த்தி கொண்டு தான் இருக்கிறார்., இன்னமும் வாழத்துவார் அந்த கலைஞனுக்கு வேறெதும் சூழ்ச்சி தெரியாது..!!!

Video:

Related Posts

View all