இவங்க தான் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யாவா? வாழை லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Mari selvaraj next movie update

சிறந்த கலை படைப்புகளை வெகுஜன மக்களும் விரும்பி கொண்டாடும் வகையில் வழங்கிவரும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் அடுத்த படைப்பான வாழை படத்தின் படப்பிடிப்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கிவைத்து, குழுவினருக்கு வாழ்த்துதெரிவித்து மகிழ்ந்தோம் என்று மாமன்னன் படத்தின் நாயகன் உதயநிதி ட்வீட் செய்துள்ளார். இப்போ மாரி செல்வராஜும், உதயநிதியும் நல்ல கிளோஸ் ஆகிட்டாங்க. மேலும் ஒரு படத்துக்கு கூட கமிட் ஆக வாய்ப்பிருக்கு.

உதய்க்கு இப்போ தான் ஒரு ரிலீஸ் ஆயிருக்கு, கலகத்தலைவன். அதனால் மாமன்னன் படத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளி வெச்சுட்டாங்க போல. மார்ச் 2023 அன்று ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதையும் உதய சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். உதையின் அடுத்த படத்தின் அப்டேட் பற்றி எதுவும் தெரியவில்லை.

Mari selvaraj next movie update

சாதிக்கொடுமையை திரைப்படம் என்னும் ஈட்டி செய்து , எங்கே அது பேயாய் தலைவிரித்து ஆடுகிறதோ, அதையே களமாய் அமைத்து அதன் நெஞ்சிலேயே குத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ். தமிழகமெங்கும் இவர் எடுக்கும் திரைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தும், படுத்த வேண்டும் என்று இவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலிருந்தே மக்களின் கருத்தாக இருந்தது.

தற்போது மாமன்னன் படத்தை முடித்த கையேடு, டிஸ்னி ஹாட்ஸ்டாருக்காக வாழை என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதில் கலையரசன் நாயகனாக, நிகிலா விமல் நாயகியாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நிறைய குட்டீஸ் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மாரி செல்வராஜ் மனைவி திவ்யாவை மற்றும் குடும்பத்தினரை பார்க்கத்தவர்களுக்கு மேலே இருக்கும் புகைப்படம் சமர்ப்பணம்.

Latest Photos:

Related Posts

View all