மணிகண்டன் மிரட்டல்.. அதர்வா முரட்டு சம்பவம்.. அழகியே DD.. மத்தகம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Mathagam trailer video viral](/images/2023/07/21/mathagam-teaser-video-viral-2-.jpg)
குறுகிய காலகட்டத்தில் அதிக போலீஸ் கெட்டப் யார் போட்டது என்றால் அது அதர்வா தான், அவரை நிறைய போலீஸ் கதாபாத்திரத்தில் பார்க்க முடியுது. நல்ல உடம்பு, ஹெயிட்டு, நச்சுன்னு இருக்கார். ஆனால் தமிழ்நாட்டில் இவரளவுக்கு பிட்டா உண்மையான போலீஸ் அதிகரிகளையே பார்க்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
நடிகர் மணிகண்டன் குட் நைட் படத்துக்கு பின் இவரோட மார்க்கெட் கொஞ்சம் ஏறிடுச்சு. அந்த படத்தில் எப்படி அப்பாவியா நடிச்சிருந்தாரு. இப்போ பாருங்க இந்த படத்தில் வில்லனா என்று தெரியவில்லை ஆனால் செம்ம மிரட்டலா இருக்கு. கண்டிப்பா இவருக்கு க்ரே shades செட் ஆகும் தான் போல.
![Mathagam trailer video viral](/images/2023/07/21/mathagam-teaser-video-viral-1-.jpg)
ஒரு படத்தின் கதை அறுவை பழசாக இருந்தாலும் திரைக்கதை தரமா இருந்தால் படம் தரமான சம்பவமா இருக்கும். நிறைய சுமாரான கதை கொண்ட படங்களே திரைக்கதையின் அற்புதத்தால் 200 நாட்கள் ஓடிய காலம் எல்லாம் உண்டு. இந்த படத்தில் நிகிலா விமல், DD முக்கியமான ரோல் பண்றாங்க.
இந்த படம் ஒரே இரவில் நடந்து முடிக்கும் கதை என்று நினைக்கிறோம், அப்படி தான் தெரிகிறது. படத்தின் ஒளிப்பதிவு ரொம்ப சூப்பரா இருக்கு. லோகேஷ் படம் போல டார்க் மோட்லையே எடுத்திருக்காங்க. ஹாட்ஸடாரில் ரொம்ப சீக்கிரமாகவே ஸ்ட்ரீம் ஆகா போகுது. அதர்வாக்கு இன்னொரு ஹிட் காத்திருக்கு.
Video: