மணிகண்டன் மிரட்டல் வில்லன்.. அதர்வா போலீஸ்.. செம்மையா இருக்கும் போலையே.. மத்தகம் வீடியோ வைரல்.

Mathagam trailer video viral

ரொம்ப நாள் கழிச்சு அதர்வா நடிப்புல ஒரு முழு நீள action படத்தை காண இருக்கிறோம். இப்போ இருக்கும் இளம் கதாநாயகர்களில் இவர் தான் அதிக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று நினைக்கிறோம். மீண்டும் ஒரு போலீஸ் கதாபாத்திரம், ஜோடியாக இப்போ இருக்கும் சென்சேஷனல் நடிகை நிகிலா விமல்.

இந்த படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் யார் வில்லன் என்பது தான். கிட் நைட் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த மணிகண்டன் தான் இந்த படத்தின் வில்லன். ஒரு அப்பாவியா நடிச்சுட்டு இந்த படத்தில் பாருங்க வில்லனா சும்மா மிரட்டியிருக்காரு. அவருக்கு ஜோடியாக DD நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கரு கொஞ்சம் இன்டெரெஸ்ட்டிங்.

Mathagam trailer video viral

அந்த கரு தான் இந்த ட்ரைலர் ஆரம்பத்திலேயே வருகிறது. எவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப எளிமையா சொல்லிருக்காங்க. அதாவது ஒருவன் ஒருவனை பார்த்து பயப்படுகிறான் என்றால் அவனை விட அவன் வலிமையாக இருக்க வேண்டும், பயப்படவில்லை என்றால் எந்த விதத்திலும் அவனுக்கு அவனால் எந்த பயனும் இல்லை என்பது அர்த்தம்.

எல்லாருமே அப்படித்தானே. ஒருவனை பிடிக்கவில்லை என்றாலும் அவனால் நமக்கு காரியம் ஆகும் என்று தெரிந்தால் அவனை எக்காரணம் கொண்டும் பகைத்துக்கொள்ள மாட்டோம் அல்லவா. இந்த ட்ரைலர் எவ்வளவு ஸ்பீடா இருக்கோ அதேமாதிரி முழு படமும் இருந்தால் செம்ம வெற்றி பெரும் என்பதில் சந்தகேமில்லை.

வீடியோ:

Related Posts

View all