சோகமா இருந்தா கூட அம்ரிதா செம்ம ஹாட்டு. யுவன் போதை. மாற்றம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Matram video viral jiiva jai yuvan

இந்த மாதிரி பாடல் எல்லாம் கேட்கும்போது எப்போடா இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று மனம் ஏங்குகிறது. பொன்னியின் செல்வன் ரிலீசான அடுத்த வரமே இந்த படம் ரிலீஸ் ஆகவேண்டியது, ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்ப்பு இன்றைய தேதியில் கூட குறையாமல் இருக்கிறது. அதனால் இந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் நவம்பர்க்கு தள்ளி வைத்தது தான் சோகம்.

நமக்கு எப்போதுமே சுந்தர் சி படம் ஒன்னு வந்திடனும் ஒரு வருசத்துக்கு ஒரு முறையாவது. அவருக்கு தான் பசங்களோட லேட்டஸ்ட் ட்ரெண்ட் தெரியும், அதனால் எப்போவுமே இவரோட படத்துக்கு இளைஞர்களிடம் இருந்து வேற லெவல் வரவேற்பு கிடைக்கும். கதையிலும் எமோஷன்ஸ் இருக்குமே தவிர ரொம்ப மூளையை போட்டு குளப்பும்படி படங்கள் எடுக்கமாட்டார். இன்னொன்னு திரைக்கதை. அவ்வளவு ப்ரெஷாக, கலர்புல்லா இருக்கும். பாட்டு எல்லாம் சொல்லவே வேண்டாம்.

Matram video viral jiiva jai yuvan

எப்படியும் கதை ரொம்ப பன்னாக ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் வந்து, ஒன்றாக இருந்தவர்கள் பிரியும் வலி, வேதனை அனைத்தும் இந்த படத்தில் இருக்கும். காமெடிய கலந்த காதல், கிளாமர் குறையாமல் இருக்கும். இந்த மாற்றம் பாடல் வலியை தான் உணர்த்துகிறது.

ஒன்றாக சந்தோசமாக இருந்த குடும்பம் பிரிகிறது காதலால். ஜீவா - மாளவிகா சர்மாவுக்கும், ஜெய் - அம்ரிதா ஐயர்க்கும் உண்டாகும் காதல் தான். யுவனின் இசை மீண்டும் ஒரு போதை நமக்கு, சோகத்தில் இருகிறார்கள் கண்ணில் இருந்து தண்ணியே வந்துவிடும், அந்தளவு இருக்கிறது இந்த பாடல். ரொம்ப நல்ல இசையமைச்சிருக்காரு. இந்த படம் இவருக்கு உண்மையாவே comeback கொடுக்கும் அதாவது ஒரு ஆல்பமா.

Video:

Related Posts

View all