அஜித் தானே உங்களுக்கு பிடிச்ச நடிகன் என்று இப்போவும் விஜய் கிண்டல் பண்ணுவார். முழு விவரம்.
பொன்னியின் செல்வன்: குந்தவை (த்ரிஷா ) & நந்தினி (ஐஸ்வர்யா ராய்). படத்தில் கதாபாத்திரம் (Good Vs Evil )என்று பார்த்தால் குந்தவை பிடிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து த்ரிஷா outshines ஐஸ்வர்யா.
பொன்னியின் செல்வன் நந்தினி. நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் கதைமாந்தர் . நந்தினி வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். கல்கியின் காவியத்தில் எத்தனையோ பாத்திரங்கள். அவற்றில், அனைவரையும் விஞ்சி நிற்பது நந்தினியே. மந்தாகினி மகள். ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலி. வீரபாண்டியனின் அன்பிற்குரியவள். பெரிய பழுவேட்டரையரின் பட்டத்து ராணி.
இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் அதாவது நடிக்க ஆசைப்பட்டவர் என்று சொல்லலாம். அது மீனா தானாம். “நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார். அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு நடிகையை பார்த்து பொறாமை கொள்கிறார் என்றால் அந்த பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய் தானாம்.
மேலும் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் மீனா. அஜித் கூட இணைத்து நடிச்சுட்டாங்க மீனா. நான்கு படங்களில் விஜயுடன் கமிட் ஆக வேண்டிய அவங்க, எதோ காரணங்களால் நடிக்க முடியவில்லை. அதனால் விஜய் இப்போ பார்த்தாலும் கிண்டல் செய்வாராம், வளர்ந்து வரும் நாயகன் என்பதால் தான் நடிக்க மறுத்தீங்க, உங்களுக்கு பிடிச்ச ஹீரோ அஜித் தானே என்று.
Tweet:
“வளர்ந்து வரும் நாயகன் என்பதால்தானே நடிக்க மறுக்கிறீர்கள். #Ajithkumar தானே உங்களுக்குப் பிடித்தமான நாயகன் என்று #ThalapathyVijay (@actorvijay) இப்போதும் கிண்டல் செய்வார்,” @Actressmeena16
— gowri_gal (@gowri_gal) December 25, 2022
via #Tamil Murasu 🇸🇬🌍…📊 pic.twitter.com/SGYkcxNpba