சும்மா மிரட்டி மிரட்டி வெச்சிருக்காங்க.. அவ்ளோ லிப் லாக் இருக்கும் போல.. மைக்கேல் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
![Michael trailer video viral](/images/2023/01/23/michael-trailer-video-viral-2-.jpg)
இந்த மைக்கேல் படம் எப்போ ஆரம்பிச்சு முதல் பார்வை வெளியில் வந்ததோ அப்போது முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் எகிறி தான் இருக்கிறது. எப்படி தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆன போது எல்லாமே ஒரு படத்துக்கு கிளிக் ஆச்சோ அதுபோல அந்த வைப்ஸ் தான் இந்த படத்திற்கும். ரொம்ப கிளாஸா எடுத்தியிருக்காரு இயக்குனர்.
இந்த படத்தில் கெளதம் மேனன் இருக்காரு, விஜய் சேதுபதி இருக்காரு, சந்தீப் கிஷான் இருக்காரு, வரலட்சுமி சரத்குமார் இருக்காங்க கதாநாயகியா செம்ம அழகா திவ்யான்சா இருக்காங்க. எல்லா கதாபாத்திரங்களுக்கும் சரியாக தீனி மட்டும் போட்டிருந்தாள் படம் சம்பவம் செய்யும் என்பதை இந்த ட்ரைலர் நிரூபிக்கிறது. பிப்ரவரி மூன்றாம் தேதி ரிலீஸ். பார்க்கலாம் எப்படி இருக்கும் என்று.
![Michael trailer video viral](/images/2023/01/23/michael-trailer-video-viral-1-.jpg)
பயங்கரமான சண்டை காட்சிகள்.. மிரட்டல் ஸ்டண்ட்ஸ், ரத்தம் தான் படமே. ஆனால் எல்லாமே ஆரம்பிப்பதற்கு ஒரு புள்ளி தேவைப்படுகிறது. இந்த போர் காதலுக்காக, கதாநாயகிக்காக. அதை ஒரு வசனம் மூலமே சொல்லியிருக்காரு இயக்குனர். விஜய் சேதுபதி கெட்டப் தான் முரட்டுத்தனமா இருக்கு. தெலுங்கு வாடை அடிக்கிறது. பார்க்கலாம்.
அன்பில் துயரில்லை; பெண்ணில் பிழையில்லை;
அன்பையும் பெண்ணையும் தக்கவைத்துக் கொள்ளும் வாழ்க்கைதான் வலிதோய்ந்தது.
Presenting you #MichaelTrailer🔥 என்று இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த எழுத்தே அவர் எந்த அளவு கான்பிடெண்டா இருக்கார் என்று தெரிகிறது.
Video: