என்ன சிவா பொசுக்குன்னு எல்லா மயி*ம் ஒன்னு தான்னு சொல்லிட்டாரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு தான் haters இருக்கவே மாட்டாங்க. அப்படி ஒரு நடிகர் சிவா. இவரோட முகபாவனைகளுக்கு ரசிகர்கள் இல்லாம இருக்கவே மாட்டாங்க. எந்தவொரு படங்களிலும் தன்னோட முக பாவனை, வசனம் டெலிவரி மூலமாகவே தூக்கி சாப்புட்டு பிடுவாரு. இதுவரை இவரை சரியா யூஸ் பண்ணினவங்க இரண்டே இயக்குனர்கள் தான் ஒருத்தர் வெங்கட் பிரபு, இன்னொருத்தங்க கிருத்திகா உதயநிதி.
இவருக்கான கதை என்று இல்லாமல் தரமான ஒரு காமெடிய கலந்த கதையை உருவாக்கி அதி இவரை அமரவைத்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. கதையில் காமெடிய இருக்க வேண்டுமே தவிர, காமெடிக்காக ஒரு படத்தை எடுத்தால் 10 படங்களில் ஒரு படம் தான் ஹிட் ஆகும். அதற்கு சாட்சி தற்போது வந்த நாய் சேகர் படம். வடிவேல் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்று தெரியும், அவருக்கே இந்த அடி.
ஒரு நடிகர் கிடைத்துவிட்டார், தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் என்று வேகவேகமாக ஒரு கதையை உருவாக்கி படம் எடுத்து ஓடிய படங்கள் என்று கைவிட்டு எண்ணிவிடலாம். எப்போதுமே அப்படி இருக்கக்கூடாது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் இதுவரை தோற்றதாக சரித்திரமே இல்லை. காமெடிய கலந்த படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவாவை ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க வைத்து, அதில் காமெடியை அங்கங்கே புகுந்து ஹிட் கொடுத்தவர் தா கிருத்திகா.
வணக்கம் சென்னை ஒரு தரமான படம். தற்போது சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று சிவாவின் பிறந்தநாள், அதனால் அந்த படத்தின் முதல் பார்வையை படக்குழு ரிலீஸ் செய்திருக்கிறது. அந்த படத்தின் tagline தான் செம்ம ற்றேண்டிங். கண்டிப்பா இந்த படம் இவருக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புவோம்.