இக்காட்சி காணும் பொழுது.. SPB அவர்கள் நினைவிடத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mohan spb video viral

என்றும் நம் இதயங்களில் ஒலிக்கும் திரு. எஸ்பிபி அவர்களின் நினைவிடத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் செலுத்திய நினைவஞ்சலி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். SPB அவர்கள் பாடலும் Mohan Sir வாயசைப்பதும் இறைவன் படைத்த அதிசயம். இனி SPB சரண் பாடலுக்கு Mohan sir வாயசைத்து பாடி நடிக்கணும். அந்தப்படங்களும் Super Hit ஆகணும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”.. இந்த வரிகள் கேட்டால் அவர் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. பாடும் நிலவின் குரல் என்றும் நம்முடனே பயணிக்கும்.

நடிகர் மோகனை மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை இசைஞானி மற்றும் SPB அவர்களுக்கே. நன்றி மறவா மனிதர் மோகன். காணொளி பார்க்கும்போது கண்கள் பனிக்கிறது. நடிகர் மோகன் வந்து இப்படி SPB அவர்களுக்கு இதை செய்யணும்னு என்று ரசிகர்கள் ரொம்ப நாளா ஆசைப்பட்டார்கள், அவர் நேற்று வந்து மரியாதை செலுத்தியது மனசு சந்தோசமா இருக்கு. மோகன் பாடல் என்றாலே எஸ்பிபி தான்.

இறந்த காலங்கள் என்றும் திரும்பி வர போவதில்லை. இனி ஒருமுறை அந்த காலங்கள் வராதா என்ற ஏக்கம் மனதிற்குள். மோகன் SPB அவர்கள் இருவரும் நம் தந்தைதாய்மார்களின் பள்ளி பருவத்தில் கொண்டாடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Video:

Related Posts

View all