இது வேற லெவல் சம்பவமா இல்ல இருக்கு. தளபதியை வைத்து படம் எடுக்கும் தல தோனி. முழு விவரம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வரும் 2023ல் நடக்கும் ஐபிஎல் போட்டி கடைசி போட்டியாக இருக்கலாம். அவர் கடைசியாக சென்னையில் விளையாட வேண்டும் என்பது அவரின் விருப்பம். அவர் நினைத்தால் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கூட விளையாடலாம், ஆனால் சென்னையில் கடைசி போட்டி இருக்கவேண்டும். ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பது வரின் விருப்பம். அவருக்கு நல்ல ஒரு சென்ட்-ஆப் இருந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக உடனே retire ஆகிவிட்டார்.
கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து அவருக்கு தற்போது சினிமாவில் வர சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. தோனி என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பாக தமிழ், தெலுங்கு,மலையாள மொழிகளில் படம் தயாரிக்கலாம் என்று பேசி வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
மேலும், அவரின் முதல் படத்தை தளபதி விஜயுடன் செய்யவேண்டும் என்பது அவரது ஆசை போல. அவருக்கு ராசியான எண் 7. அதனால் தளபதி விஜய் நடிக்கும் 70வது படத்தை அவர் தயாரிக்கவுள்ளதாக செய்தி பரவலாக வைரல் ஆகிவருகிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் தமிழ் சினிமாவின் பெரிய ஓப்பனிங், அந்த படமாக தான் இருக்கும். இப்போது விஜய் நடிக்கும் படங்கள் தான் முதல் நாள் வசூலில் கொடிகட்டிப்பறக்கிறது. இவங்க இரண்டு பெரும் இணைகிறார்கள் என்றால், அந்த படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்.
தோனிக்கு நடிகர் சூர்யாவையும் நன்றாக தெரியும் என்பதால், அவரை வைத்தும் படம் தயாரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை எதுவும் முடிவு செய்ய முடியாது. தற்போது விஜய் 66வது படத்தில் நடித்து வருகிறார், அடுத்து லோகேஷுடன் 67வது படம், அடுத்து இரண்டு படங்கள். இதையெல்லாம் அவர் முடிக்கவே இரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.