அய்யோ இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்று ஏக்கம். என்னா படம்யா.. முகுந்தன் உன்னி அஸோஸியேட்ஸ் சினிமா review.
தமிழ் சினிமாவில் இந்தவரம் ரிலீஸ் ஆகும் படங்களை விட சமூக வலைத்தளங்களில் மலையாள படமான முகுந்தன் உன்னி அஸோஸியேட்ஸ் படத்தை பற்றி தான் பரவலான பேச்சு கடந்த இரண்டு வாரங்களாகவே இருந்து வருகிறது. இந்த படகின் ட்ரைலர் எப்போது வெளியதோ அப்போது முதல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி தான் இருக்குது. எப்படி ஒரு நல்ல படத்தை நல்ல மார்க்கெட்டிங் செய்தால் ஒரு regional மொழி படம் பான் இந்தியா படமாக மாறும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இன்னும் வரும் நாட்களில் உங்கள் கண்முன்னே பார்ப்பீங்க.
ஒரு படத்தின் ட்ரைலர் நன்றாக அமைந்துவிட்டால் போதும் அந்த படத்துக்கான எதிர்பார்ப்பு படம் ரிலீஸ் ஆகும் வரை ரசிகர்களுக்கு அந்த ஹைப் இருந்துகொண்டே இருக்கும். அப்படி ஒரு ட்ரைலர் கட் செய்த படத்தின் எடிட்டரை பாராட்டியே ஆக வேண்டும். சரி படகுக்கு வருவோம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களா வினீத் ஸ்ரீனிவாசன், சூரஜ், தன்வி ராம், சுதி கோப்பா, அர்ஷா பைஜூ, சலீம் குமார் ஆகியோர் நடிச்சிருக்காங்க. ஒரு படத்துக்கு தேவை நல்ல காஸ்டிங், இங்கயே படம் ஜெய்க்குது.
இந்த படம் ஒரு டார்க் காமெடி படம் என்று சொல்லுவாங்க, ஆனால் அதையும் தாண்டி பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. இந்த படம் ஒரு மெடிக்கல் ட்ராமா, crime பிளாட் தான் ஸ்டோரி. ஆனால் இதை எவ்வளவு நேர்த்தியான காமெடியான முறையில் சொல்ல முடியும் என்று யோசித்து வழங்கியுள்ளார் இயக்குனர். வினீத் இந்த ரோலுக்கு செம்மயா சூட் ஆவுறாரு. அவரின் ஒவ்வொரு முக பாவனைகளும் இந்த படத்துக்கு செம்ம பிளஸ். யாரெல்லாம் ஹீரோவ ஒரு பிளாக் டார்க் evil shadeல பார்க்கணும் அப்டின்னு நினைக்கிறிங்களோ, அவங்களுக்கு எல்லாம் செம்ம ட்ரீட்டா இருக்கும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவும் எடுக்கவேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.
இந்த படத்துக்கு இன்னொரு ப்ளஸ் சப்போர்டிங் கதாபாத்திரங்கள். தன்வி, அர்ஷா ரெண்டு பேருமே பார்ப்பதற்கு செம்ம க்யூட். அதுபோக சலீம், சூரஜ் ஆகியோர் லீட் ரோலுக்கு சூப்பரா சப்போர்ட் பண்ணிருக்காங்க. நடிகர் சூரஜ்ஜ தமிழ் ரசிகர்கள் சமீபத்தில் வெளிவந்த ஜன கன மன படத்தில் பிரித்விராஜுடன் பார்த்தோம். அதுபோலயே இதுவும் அவருக்கு ஸ்கோர் பண்ண வைக்கும் ரோல் தான். படகுக்கு இசை சிபி மாத்தியூ alex, இந்த மாதிரி படத்துக்கு எவ்வளவு வேணுமோ அதை சூப்பரா போட்டிருக்காரு, மனதில் நிற்கும் இசை தான்.
இறுதி வார்த்தைகள் ஆங்கிலத்தில்: The less you know going into this film, the better. It is Smart, darkly humorous, and above all unique, Mukundan Unni Associates is a fantastic pitch-black comedy with a wicked performance from Vineeth Srinivasan.
இந்த படத்தை பற்றி உங்களுக்கு எவ்வளவு கம்மியாக தெரிகிறதோ, அந்த அளவுக்கு இந்த படம் நீங்க பார்க்கும் போது அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
Rating: 3.75/5