அந்த பையன் கிட்ட அப்படியொரு பண்பு. இந்திய சினிமாவோட முக்கியமான ஹீரோ ஆகப்போகிறார். மிஸ்கின் வீடியோ வைரல்.

Mysskin maaveeran video viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் டாப்பில் இருக்கிறார் என்றால், அது அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களால் தான். அதுவும் விஜய், அஜித் போன்றவர்கள் டாப்பில் இருக்க காரணம் அவர்களோட ரசிகர்கள். தொடர்ந்து 5 படம் பிளாப் ஆனாலும் ஆறாவது படம் நடித்து டீசர்/ட்ரைலர் வரும்போது முதல் நாள் ஓப்பனிங் அவங்களுக்கு தான் அதிக வசூல் இருக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அப்படி. யாரும் வேணும் என்றே மொக்க படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயன் தற்போது இவங்களோட வழியில் தான் ட்ராவல்.

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்குனராக இல்லாமல்,பல படங்களில் நடிகர் அவதாரம் எடுத்து வருகிறார். அவர் நடிப்புக்கும் பல பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டுக்கு சவரகத்தி படத்தை கூறலாம். அவர் அதுமட்டுமில்லாமல் நல்லா பாடவும் செய்வாரு. சமீபத்தில் கூட ஒரு வீடியோ பார்த்தோம், செம்ம ட்ரெண்ட் ஆனது. தற்போது அவர் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் வர தான் மெயின் வில்லன் என்றும் சொல்லப்படுகிறது.

Mysskin maaveeran video viral

மண்டேலா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பின் மடோனே அஸ்வின் இயக்கம் அடுத்த படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் மெயின் லீட் ரோல் பண்றாங்க. இந்த படத்தை பற்றி மிஷ்கின் ரொம்ப பெருமையா பேசியிருக்கிறார் என்றால் நாம் நம்பி தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவரின் சினிமா பார்வையை கண்டிப்பாக கேள்விகேட்க முடியாது. சிவகார்த்திகேயன் ரொம்ப அன்பாகவும், பண்பாகவும் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். அடுத்து தமிழ் சினிமா அல்ல இந்திய சினிமாவின் முக்கியமான ஹீரோவாக இவர் இருப்பார் என்றும் சொல்லிருக்காரு.

மேலும் இந்த படத்தின் அவர் தான் ஒரேய வில்லன் போல, MLA கதாபாத்திரம் பண்றாரு, படம் ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கிறதா சொல்லியிருக்காரு. அய்யா அப்படியே அந்த பிசாசு 2 பட ரிலீஸ் தேதியை அறிவிச்சிங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.

Video:

Related Posts

View all