இதை expect பண்ணல.. மிஸ்கின் நீங்க இவ்ளோ நல்லா பாட கூட செய்விங்களா? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mysskin singing latest video viral

மிஸ்கின் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவர் படங்களை தாண்டி அவர் கொடுத்த இன்டெர்வியூவும், அந்த கருப்பு கண்ணாடி தான், ரொம்ப சீரியஸாவே இருப்பாரு, மனதில் எதாவது ஓடிக்கொண்டே இருக்கும் என்பது தான் அவரை பற்றி பரவலான கருத்து. ஆனால் அவரது சினிமா புரிதல் வேறு. பிரமாண்டமாக எடுத்த பாகுபலி படத்திலாயே ஜஸ்ட் another பிலிம்ன்னு சொன்னவர், ஆனால் அவர் சொன்ன அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். எதாவது புதுமையை தேடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

மிஸ்கின் ஒரு நல்ல இயக்குனர், திரமைசாலி என்பதை எல்லாம் தாண்டி அவர் ஒரு சிறந்த பாடகர். அவர் அவ்வப்போது பாடி வருகிறார் படங்களிலும். 2008ம் ஆண்டு கண்ணதாசன் காரைக்குடில ஆரம்பிச்சு 2017ம் ஆண்டு வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ‘இவன் துப்பறிவாளன்’ பாட்டு வரை ஒரு சில நல்ல பாடல்களை பாடியுள்ளார். இவரோட வாய்ஸ் எப்போவும் அண்டர்-ரேட்டேட் தான். இவரை இயக்குனராக வேற லெவெலில் பார்க்கிறது சமூகம், ஆனால் சிங்கராக இல்லை என்பது வருத்தமான விஷயம்.

சமீபத்தில் இவர் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ இப்போது பல ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதில் இன்னொன்று சுவாரிஸ்யமான விஷயம் என்னவென்றால் ரசிகர்கள் பலர் கண்ணாடி இல்லாமல் மிஷ்கினை பார்த்துள்ளனர். அவர் பாடிய பாட்டு இசைஞானி இளையராஜா பாடிய பாடல், ஆனாலும் கூட கிட்டத்தட்ட மெட்டை எட்டிட்ட்டாரு.

Mysskin singing latest video viral

தற்போது மிஸ்கின் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதியை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியான டீசர் கூட ரொம்ப அருமையாக இருந்தது. படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்.

Video:

Related Posts

View all